30 வயதிலேயே வழுக்கை பிரச்சனை… இதுதான் காரணமா..? தடுப்பதற்கான ஆலோசனைகள்..!

பல்வேறு காரணங்களால் ஆண்கள் மற்றும் பெண்கள் என இரு தரப்பினருமே இளம் வயது முதலே பல்வேறு கூந்தல் பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள். இதில் பொடுகு தொல்லை, முடி உதிர்வு, முதுமைக்கு முன்பே தலைமுடி நரைத்தல் உள்ளிட்ட பல பிரச்சனைகள் அடக்கம்.

இதில் ஆண்களை மட்டுமே அதிக அளவில் பாதிக்கும் பிரச்சனை என்று பார்த்தால் தலையில் இருக்கும் முடியானது நிரந்தரமாக உதிர்வதால் ஏற்படும் வழுக்கையை குறிப்பிடலாம். முன்பெல்லாம் 45 – 50 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தான் வழுக்கை பிரச்சனை ஏற்படுவது பொதுவானதாக இருந்தது. ஆனால் 30 வயதை எட்டுவதற்குள்ளாகவே பல இளைஞர்களுக்கு தற்போது வழுக்கை விழுவது, முடி மிக அதிக அளவில் உதிர்வது உள்ளிட்டவை கவலைக்குரிய விஷயமாக இருக்கிறது.

இந்த முடி பிரச்சனைகள் சமீப ஆண்டுகளாக தீவிரமாக இருப்பதற்கு உணவு முறை, சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் வாழ்க்கை முறை தவிர மரபியல், ஹார்மோன் பேட்டர்ன்ஸ் உள்ளிட்டவை காரணமாக இருக்கலாம். வழுக்கை பிரச்சனை பற்றி பேசி இருக்கும் மும்பையைச் சேர்ந்த அழகியல் மருத்துவரான டாக்டர் பல்லவி சுலே ஆண்களுக்கு ஏற்படும் வழுக்கை ஆண்ட்ரோஜெனெடிக் அலோபீசியா (androgenetic alopecia) என்று அழைக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

மக்களில் 50% பேரில் முடி உதிர்தலுக்கு இதுவே பொதுவான காரணமாக உள்ளது. ஆண்களில் இது முன் மண்டை, பக்கவாட்டில், நடு உச்சந்தலை, என தலையின் பல்வேறு பகுதிகளில் ஏற்படுகிறது. ஆண்ட்ரோஜெனெடிக் அலோபீசியா என்பது ஹார்மோன் சார்ந்த மற்றும் ஜெனட்டிக்கலி மீடியேட்டட் டிஸார்டர் ஆகும்.

முடி உதிர்தல் மற்றும் முடி மெலிந்து போவதற்கான காரணங்கள் கீழே…

தவறான உணவு முறை: தவறான மற்றும் ஆரோக்கியமற்ற உணவுமுறை கூந்தல் ஆரோக்கியத்தில் கடும் எதிற்மறை விளைவுகளை ஏற்படுத்தும். எப்போதுமே சரியான சமச்சீரான டயட்டை பின்பற்ற வேண்டும். இதன் மூலம் கூந்தலின் தடிமன் மேம்படும், ஆரோக்கியமாக இருக்கும் மற்றும் வழுக்கை ஏற்படுவதை தடுக்க உதவும்.

வாழ்க்கை முறை பழக்கங்கள்: தினசரி போதுமான உறவு தூக்கம் இல்லாமல் இருப்பது, மோசமான உணவுகளை எடுத்து கொள்வது, புகை மற்றும் மது போன்ற பழக்கங்களும் கூந்தல் ஆரோக்கியம் மற்றும் வளர்ச்சியை பாதிக்கிறது.

கூந்தல் பராமரிப்பு பொருட்களின் அதிக அல்லது தவறான பயன்பாடு: கூந்தலை அழகாக்கும் ஸ்டைலிங் டூல்ஸ் மற்றும் டிவைஸ்கள் உண்மையில் முடிக்கு அவ்வளவு நல்லதல்ல. இவற்றை கூந்தலுக்கு பயன்படுத்துவது தற்காலிகமாக ஹேர் ஸ்டைலிங் செய்ய உதவினாலும், ஒவ்வொரு முறை இது போன்ற கருவிகளை பயன்படுத்துவது கூந்தலின் இயற்கை அமைப்பை (Natural texture) சேதப்படுத்தும்.

மன அழுத்தம்: உணர்ச்சி நலனுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் மன அழுத்தமுடன் இருப்பது நம் ஆரோக்கியத்தை பல வழிகளில் பாதிப்பதோடு, முடி உதிர்வு பிரச்சனைக்கு முக்கிய பங்கு வகிக்கிறது. மன அழுத்தம் உங்கள் முடியின் இயற்கையான அமைப்பையும் சேதப்படுத்துகிறது.

ஸ்கால்ப் இன்ஃபக்ஷன் (தொற்று): உச்சந்தலை அதாவது ஸ்கால்ப்பில் தொற்று ஏற்படாமல் இருக்க உரிய நிபுணரை அணுக வேண்டும். ஏனென்றால் scalp-ல் ஏற்படும் தொற்றானது கூந்தல் வளர்ச்சியை பாதிக்கிறது.

முடி உதிர்தல் மற்றும் வழுக்கைக்கான சிகிச்சைகள்:

முடி உதிர்தல் மற்றும் வழுக்கை பிரச்சனைக்கான சிகிச்சை அது எந்த அளவிற்கு தீவிரமாக இருக்கிறது என்பதை பொறுத்து இருக்கும். சில வழக்கமான சிகிச்சை முறைகள் கீழே…

தலைமுடியை இறுக்கமாக வைக்காதீர்கள்…

கூந்தலை இறுக்கமாக இழுத்து பிணைப்பது உங்கள் தலைமுடிக்கும் உச்சந்தலைக்கும் இடையிலான பிணைப்பு தளர காரணமாக இருக்க கூடும். எனவே கூந்தலை ஜாடை போடுவது, போனிடெயில் மற்றும் கார்ன்ரோஸ் போன்ற ஹேர் ஸ்டைல்களை செய்வதை தவிர்க்க வேண்டும். உங்கள் தலைமுடியை சீவ மென்மையான முட்கள் கொண்ட இயற்கையான ஃபைபர் பிரஷ்ஷை பயன்படுத்தவும். அதே போல தலைகுளிக்கும் போது ​​கடும் கெமிக்கல்ஸ் இல்லாத மென்மையான ஷாம்புகள் மற்றும் கண்டிஷனர்களை பயன்படுத்துங்கள். ஹீட் ஸ்டைலிங் தயாரிப்புகளை அதிகம் பயன்படுத்தாதீர்கள்.

முடி உதிர்தலை நிறுத்த உதவும் வீட்டு வைத்தியம்…

வெந்தயம், நெல்லிக்காய், சீகக்காய் மற்றும் பிரமி போன்ற ஏராளமான அற்புத மூலிகைகள் கூந்தலை சிறப்பாக பராமரிக்கவும், அதன் வளர்ச்சியை ஊக்குவிக்கவும் உதவுகின்றன. இவை தவிர ரோஸ்மேரி சாற்றை கூந்தல் பராமரிப்பு வழக்கத்தில் சேர்ப்பது முடி உதிர்தலை கணிசமாக குறைக்கிறது. பாதாம் மற்றும் ஆலிவ் ஆயில் போன்ற ஹேர் ஆயில்ஸ் மற்றும் இயற்கையான முடி சிகிச்சைகள் உச்சந்தலையை மசாஜ் செய்து ரத்த ஓட்டத்தை அதிகரிக்க மற்றும் முடி உதிர்தலைக் குறைக்க பயன்படுகின்றன.

மருத்துவ சிகிச்சைகள்:

நிரந்தர முடி உதிர்வான வழுக்கையிலிருந்து தற்காத்து கொள்ள கூந்தலுக்கு குறிப்பிட்ட மல்டிவைட்டமின்களுக்கான ஊட்டச்சத்து சிகிச்சையைப் பின்பற்றுவதாகும். பலரும் ப்ரோகேபில், அனாகைன், கேப்சைல், கெரட்டின் போன்ற பெப்டைட்ஸ் அடங்கிய முடி வளர்ச்சி சீரம்களை நாடுகிறார்கள். அதே போல Minoxidil 5% சொல்யூஷன் கூந்தல் மேலும் மெலிவதை குறைக்கிறது, உச்சந்தலையில் முடியின் கவரேஜை அதிகரிக்கிறது, ஏற்கனவே இருக்கும் முடி அடர்த்தியையும் பராமரிக்கிறது.

லோ லெவல் லைட் தெரபி ((LLLT): இந்த சிகிச்சை ஹேர் பல்ப்-ஐ (hair bulb) சுற்றியுள்ள அழற்சியை குறைப்பதன் மூலம் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.

மைக்ரோனெட்லிங்குடன் கூடிய Mesotherapy: ஃபோலிகுலர் ஸ்டெம் செல் செயல்பாட்டைத் தூண்டும் வகையில், Microneedling-ஆனது வளர்ச்சி காரணிகளை (growth factors) ரிலீஸ் செய்கிறது.

ப்ளேட்லெட் ரிச் பிளாஸ்மா: PRP சிகிச்சை என குறிப்பிடப்படும் ப்ளேட்லெட் ரிச் பிளாஸ்மா என்பது பாதிக்கப்பட்டவர்களின் சொந்த ரத்தத்திலிருந்து உருவாக்கப்படும் ஒரு autologous தயாரிப்பு ஆகும். இது ரத்த ஓட்டத்தில் உள்ளதை விட 5 மடங்கு அதிக செறிவூட்டப்பட்ட வடிவத்தில் ப்ளேட்லெட்ஸ்களை கொண்டிருக்கும்.

முடி மறுசீரமைப்பு அல்லது முடி மாற்று அறுவை சிகிச்சை: ஆண்களுக்கு ஏற்படும் தீவிர வழுக்கைக்கு இது மிகவும் பயனுள்ள சிகிச்சையாகும். இது பின்வாங்கும் முடியை மறுசீரமைக்கவும் நிரந்தர வழுக்கைப் பகுதிகளில் முடிகளை மாற்றவும் உதவுகிறது. இது முடியை மறுசீரமைக்க மற்றும் நிரந்தர வழுக்கைப் பகுதிகளில் முடிகளை ரீபிளேஸ் செய்ய உதவுகிறது.

 

 

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *