நாளை மறுநாள் விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி..சி58 ராக்கெட்..!

செயற்கைக்கோளின் மொத்த எடை, 469 கிலோ. இது, பூமியில் இருந்து, 650 கி.மீ., துாரம் உள்ள புவி சுற்று வட்ட பாதையில் நிலைநிறுத்தப்படும்.

செயற்கைக்கோளில் பொருத்தப்பட்டுள்ள அதிநவீன எக்ஸ்-ரே கருவிகள், வானியலில் ஏற்படும் துருவ முனைப்பின் அளவு மற்றும் கோணத்தை அளவிடுவது, நியூட்ரான் நட்சத்திரங்கள், செயலில் உள்ள விண்மீன் கருக்கள் உட்பட, 50 ஆதாரங்களை ஆய்வு செய்யும். இதன் ஆயுள்காலம், 5 ஆண்டுகள்

அத்துடன், கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள லால்பகதூர் சாஸ்திரி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மாணவிகள் ‘வெசாட்’ என்ற செயற்கைகோளை வடிவமைத்துள்ளனர். இது, விண்வெளி மற்றும் பூமியின் மேற்பரப்பில் உள்ள புறஊதா கதிர்கள் மற்றும் கேரளாவில் வெப்பநிலை மற்றும் காலநிலை மாற்ற நிகழ்வுகளில் அவற்றின் தாக்கத்தை அளவிட இருக்கிறது. பெண்களின் மேற்பார்வையில் முழுமையாக வடிவமைக்கப்பட்ட நாட்டின் முதல் செயற்கைகோள் என்ற பெருமையை இந்த செயற்கைகோள் பெறுகிறது. இந்த ராக்கெட்டில் மாணவிகள் வடிவமைத்த ‘வெசாட்’ என்ற செயற்கைகோளும், வெளிநாடுகளை சேர்ந்த மேலும் 10 செயற்கைகோள்கள் பொருத்தப்பட்டு விண்ணில் ஏவப்பட உள்ளது. இதற்கான இறுதிக்கட்டப்பணியான கவுண்ட்டவுன் வருகிற 31-ந்தேதி(நாளை) தொடங்கப்பட உள்ளது.

ராக்கெட் விண்ணில் ஏவப்படுவதை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என 10 ஆயிரம் பேர் அமர்ந்து பார்வையிடும் வகையில் பார்வையாளர்கள் மாடம் அமைக்கப்பட்டு உள்ளது. நேரில் செல்ல விரும்பும் பார்வையாளர்கள் https://lvg.shar.gov.in என்ற இணையதள முகவரியில் பெயர்களை முன்பதிவு செய்து, அதற்கான அனுமதி சீட்டை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *