கங்குவா டீசருக்கு கிடைத்த வரவேற்பு… விஎஃப்எக்ஸ் குழு மகிழ்ச்சி!

சூர்யா, பாபி தியோல், திஷா பதானி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் கங்குவா. சிறுத்தை சிவா படத்தை இயக்கியுள்ளார். வெற்றி பழனிச்சாமி ஒளிப்பதிவு செய்ய, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

எழுத்தாளர் ஆதி நாராயணாவுடன் இணைந்து மதன் கார்க்கி வசனங்களை எழுதியுள்ளார். விவேகா மற்றும் மதன் கார்க்கி பாடல்கள் எழுதியுள்ளனர். சுப்ரீம் சுந்தர் சண்டைக் காட்சிகளை வடிவமைத்துள்ளார். இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் கே.இ.ஞானவேல் ராஜா மற்றும் யுவி கிரியேஷன்ஸின் வம்சி – பிரமோத் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

சமீபத்தில் வெளியான கங்குவா டீசர் மேக்கிங் மற்றும் விஎஃப்எக்ஸ் வேலைகளுக்காக உலகம் முழுவதிலுமிருந்து அமோகமான பாராட்டுகளை பெற்று வருகிறது. டீசர் வெளியான குறுகிய காலத்தில் 1.8 கோடி பார்வைகளைப் பெற்றுள்ளது. இதனால், விஎஃப்எக்ஸ் பணிகளை மேற்கொண்டவர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர். படமும் டீசர் அளவுக்கு பேசப்பட வேண்டும் என்பதற்காக கூடுதல் சிரத்தையுடன் அவர்கள் பணியாற்றி வருவதாக தயாரிப்பாளர் தரப்பு கூறியுள்ளது.

சூர்யாவின் ஸ்கிரீன் ப்ரசன்ஸ், தேவி ஸ்ரீ பிரசாத்தின் வசீகரிக்கும் பின்னணி இசை, அசத்தலான காட்சியமைப்பு, அனிமல் பாபி தியோலின் வில்லத்தனம் என பல இருந்தாலும், படத்தின் விஎஃப்எக்ஸ் பணிகளே கங்குவாவைப் பொறுத்தவரை ரசிகர்களை திரையரங்கில் கவரப் போகும் முதன்மை அம்சமாக இருக்கும். அதனால், பல கோடிகள் விஎஃப்எக்ஸ் பணிகளுக்காக ஒதுக்கியுள்ளனர்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்பட அனைத்து மொழிகளிலும் பான் – இந்தியா திரைப்படமாக கங்குவாவை வெளியிடுகின்றனர். விரைவில் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட உள்ளது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *