ஒரே ஒரு பூனையால் புற்றுநோய் பரவும் அபாயம்! மொத்த நாடே பேசிக்கொண்டிருக்கும் சம்பவம்

அதிபயங்கர ரசாயன தொட்டிக்குள் விழுந்த பூனையால் ஒட்டுமொத்த நகரத்து மக்களுக்கே புற்றுநோய் அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எங்கு நடந்தது?
ஜப்பானின் ஹிரோஷிமா பகுதியில் உள்ள ஃபுகுயாமா (Fukuyama) நகரிலேயே இந்த சம்பவம் நடந்துள்ளது. இப்பகுதியில் உள்ள தொழிற்சாலையில் பல நாட்களாக இருந்த பூனை ஒன்று காணாமல் போயுள்ளது.

பின்னர், பூனை காணாமல் போனதாக பொலிசாரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. அப்போது, பூனையை தேடும் பணியை பொலிஸார் மேற்கொண்டனர்.

பூனை குறித்து விசாரணை செய்தபோது, பூனை கடைசியாக ஒரு தொட்டியில் விழுந்தது என்று தொழிலாளர்கள் கூறியுள்ளனர்.

அப்போது தான் பூனை விழுந்த தொட்டிக்குள் பயங்கரமான ரசாயனக்கலவை இருந்ததை பொலிஸார் கண்டறிந்தனர் இந்த ரசாயன கலவையானது புற்றுநோயை ஏற்படுத்தும் என்பது தெரியவந்துள்ளது.

மக்களுக்கு எச்சரிக்கை
இந்த பயங்கரமான ரசாயனக்கலவையில் விழுந்த பூனையானது தற்போது ஊருக்குள் சுற்றிவர வாய்ப்பிருப்பதால், மக்களுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

இதனால், ஃபுகுயாமா நகரத்தில் உள்ள மக்களை பாதுகாப்பாக இருக்கும்படியும், அதனை தொடக்கூடாது எனவும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். இதனால், மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

தொழிற்சாலையின் CCTV காட்சிகளின் அடிப்படையில் பூனை எந்த திசையில் சென்றிருக்கும் என்று அதிகாரிகள் பூனையை தேடி வருகின்றனர்.

மேலும், பூனையின் CCTV வீடியோக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். பூனை விழுந்த ரசாயனத்தில் இருக்கும் க்ரோமியம் 6 -ன் தீவிர தன்மையால் பூனை இறந்திருக்கலாம் எனவும் அல்லது இறக்கும் தருவாயில் இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

ஆனால், பூனை பற்றிய விவரங்கள் இன்னும் தெரியவில்லை. இதனால், ஜப்பான் நாடே ஃபுகுயாமா நகரை பற்றி தான் பேசிவருகிறது

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *