சுவரின் மீது வேகமாக மோதிய ஸ்கூட்டி.. தூக்கி வீசப்பட்ட பெண்.. அடுத்து நடந்தது என்ன? அதிர்ச்சி வீடியோ
அதிவேகமாக ஸ்கூட்டி ஓட்டி செல்லும் பெண் சாலையோர சுவரின் மீது மோதி தூக்கிவீசப்படும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
மக்கள் பாதுகாப்பாக பயணம் செய்வதற்காக சாலை பாதுகாப்பு விதிகள் கடைபிடிக்கப்படுகின்றன. ஆனால் பலர் பாதுகாப்பு விதிகளை கடைபிடிப்பதில்லை. இதன் காரணமாக ஏராளமான சாலை விபத்துகள் நிகழ்கின்றன. இத்தகைய விபத்துகளின் வீடியோக்கள் அவ்வப்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகின்றன.
அந்த வகையில் சமீபத்தில், ஒரு விபத்தின் சிசிடிவி காட்சி இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில் இரண்டு பெணகள் ஸ்கூட்டியில் அதிவேகமாக பயணிக்கின்றனர். அப்போது சாலையின் வளைவில் திரும்பும்போது கட்டுப்பாட்டை இழந்த ஸ்கூட்டி சாலையின் ஓரம் உள்ள தடுப்பு சுவரின் மீது கடுமையாக மோதுகிறது.
இதில் ஸ்கூட்டியின் பின்புறம் அமர்ந்து வந்த பெண் சுவரை தாண்டி விழுகிறார். இதை பார்த்த மற்றொரு பெண் கூச்சலிடுகிறார். இவை அனைத்தும் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
https://twitter.com/rushlane/status/1745801656153846251
இந்த வீடியோ இணையத்தில் வெளியானதை அடுத்து 2.5 மில்லியன் பார்வைகளை கடந்து வைரலாகி வருகிறது. மேலும் இந்த வீடியோவின் கீழ் நெட்டிசன்கள் தங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்து வருகின்றனர்.