பிரதமர் மோடியின் மஞ்சள் நிற தலைப்பாகையில் மறைந்துள்ள ரகசியம்: பின்னணியில் மறைந்துள்ள காரணம் என்ன?
ஆண்டுதோறும் ஜனவரி 26 ஆம் தேதி குடியரசுத் தின விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் ஜனவரி 26ஆம் தேதியான இன்று 2024 ஆம் ஆண்டிற்கான 75ஆவது குடியரசுத் தின விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு மாநில முதல்வர்கள், ஆளுநர்கள் மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினர். இந்த நிலையில் தான் டெல்லியில் உள்ள போர் நினைவிடத்திற்கு சென்ற பிரதமர் மோடி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
ஸ்ரீ ராமருக்கு பிடித்தமான மஞ்சள் நிற தலைப்பாகையுடன் பிரதமர் மோடி நாட்டிற்காக உயிர்நீத்த இராணுவ வீரர்களின் நினைவிடத்திற்கு வந்து மரியாதை செலுத்தினார். கடந்த 22 ஆம் தேதி அயோத்தியில் புதிதாக கட்டப்பட்ட ராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சி நடந்தது. பிரதமர் மோடி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ராமர் கோவிலை திறந்து வைத்தார். இந்த நிலையில் தான் அவர் ராமருக்கு பிடித்தமான மஞ்சள் நிற தலைப்பாகை அணிந்து வந்து 75 ஆவது குடியரசுத் தின விழாவில் கலந்து கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.