பிரித்தானியா செல்ல முயற்சித்த இலங்கை தமிழர்களின் நிலை

தனிமைப்படுத்தப்பட்ட பிரித்தானிய தீவுப் பிரதேசத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள், தாங்கள் பாதுகாப்பற்றவர்களாகவும் மறக்கப்பட்டவர்களாகவும் மாற்றப்பட்டுள்ளதை உணர்வதாக தெரிவித்துள்ளனர்.

பாலியல் வன்கொடுமைகள் மற்றும் குழந்தைகளைத் துன்புறுத்துதல், அத்துடன் சுய-தீங்கு மற்றும் தற்கொலை முயற்சிகள் என்பன இடம்பெறுவதாகவும் அவர்கள், ஐக்கிய நாடுகளின் விசாரணையாளர்களிடம் தெரிவித்துள்ளனர்.

ஐக்கிய நாடுகளின் அகதிகள் அமைப்பைச் சேர்ந்த ஆய்வாளர்கள் இந்தியப் பெருங்கடலில் உள்ள டியாகோ கார்சியாவுக்கு அகதிகளின் நலன்களை பார்வையிடச் சென்றிருந்தனர்.

இதன்போது அங்குள்ள நிலைமைகள், குறித்த புகலிடக்கோரிக்கையாளர்கள், தன்னிச்சையான காவலில் வைக்கப்பட்டுள்ளதை அவர்கள் அவதானித்துள்ளனர். புலம்பெயர்ந்தோரை தவிர, தீவு இங்கிலாந்து-அமெரிக்க இராணுவத் தளமாகப் பயன்படுத்தப்படுகிறது.

ஒரு தனி செயல்முறை
தற்போது இந்த தீவு முகாமில் உள்ள 61 பேரில் பெரும்பாலும் இலங்கைத் தமிழர்கள் உள்ளனர்.

அவர்கள் 2021 அக்டோபரில் டியாகோ கார்சியாவில் தரையிறங்கினர், கனடாவுக்குச் செல்ல முயன்றபோது அவர்களின் படகு சிக்கலில் சிக்கியதால் இந்த தீவில் அடைக்கலம் பெறவேண்டிய நிலை ஏற்பட்டது.

எனவே அகதிகளை குடியேற்ற பொருத்தமான மூன்றாவது நாடு ஒன்றை எதிர்ப்பார்த்துள்ளதாக பிரித்தானிய வெளியுறவு அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு இணைய அணுகல் இல்லை மற்றும் அவர்களின் சட்டத்தரணிகளை நேரில் சந்தித்ததில்லை.

இந்தநிலையில் குறித்த புகலிடக்காரர்களை இலங்கைக்கு திருப்பி அனுப்ப வேண்டுமா அல்லது பாதுகாப்பான மூன்றாவது நாட்டிற்கு” அனுப்ப வேண்டுமா என்பதை தீர்மானிக்க ஒரு தனி செயல்முறை நிறுவப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகம் தெரிவித்துள்ளது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *