நெஞ்சில் சேரும் கபத்தை கரைக்கும் ‘சூப்பர்’ கஷாயம்… தயாரிக்கும் முறை..!!
ரும்பாலானோர் குளிர் காலத்தில் இருமல் மற்றும் சளியால் பாதிக்கப்படுகின்றனர். சளி மற்றும் கபம் மார்பில் சேருவதால் பிரச்னை மேலும் அதிகரிக்கிறது.
சில சமயங்களில் நெஞ்சு அதிக சளி இருப்பதன் காரணமாக மூச்சு விடுவது கடினமாகும். நீண்ட காலமாக நுரையீரலில் தொற்று இருந்தால் நிமோனியா ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது. இரவில் நிம்மதியாக உறங்க முடியாமல் பல சமயங்களில் சளி மார்பில் சிக்கிக் கொள்ளும். உங்கள் மார்பில் சளி கபம் சேர்ந்து இருந்தால் கண்டிப்பாக இங்கே கொடுக்கப்பட்டுள்ள ஆயுர்வேத கஷாயத்தை குடியுங்கள். 3 – 4 நாட்களுக்குள் நிவாரணம் (Health Tips) கிடைக்கும்.
கஷாயம் தயாரிக்க தேவையான பொருட்கள்
1. சுமார் 1 அங்குல இஞ்சித் துண்டு
2. சுமார் 8 – 10 கருப்பு மிளகு
3. சுமார் 8 – 10 துளசி இலைகள்.
4. ஒரு பெரிய பிரிஞ்சி இலை.
5. சுமார் 1 அங்குல பச்சை மஞ்சள் துண்டு.1 இலவங்கப்பட்டை.
7. 1 பெரிய துண்டு வெல்லம்.
8. 1 கிளாஸ் தண்ணீர்.கஷாயம் தயாரிக்கும் முறை
1. கஷாயம் தயாரிக்க, முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைக்கவும்.
2. இப்போது அதில் துளசி இலைகள், பிரிஞ்சி இலைகள், கருப்பு மிளகு மற்றும் பச்சை மஞ்சள் சேர்க்கவும்.
3. மேலும் தண்ணீரில், இலவங்கப்பட்டை, வெல்லம், இஞ்சி சேர்த்து கொதிக்க விடவும்தண்ணீர் பாதியாக வற்றி அதன் நிறம் மாறும் வரை நீங்கள் சுமார் 20 நிமி
தண்ணீர் பாதியாக வற்றி அதன்
நிறம் மாறும் வரை நீங்கள் சுமார் 20 நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும்.
5. சுமார் அரை கிளாஸ் அளவிற்கு வற்றி குறைந்த பின், அதை ஒரு குவளையில் வடிகட்டி, சூடாக குடிக்கவும்.
6. இந்த கஷாயத்தை 3 – 4 நாட்கள் தொடர்ந்து குடிக்க வேண்டும். இதனால் சளி, இருமல் பிரச்சனை நீங்கும்.கஷாயம் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
கஷாயம் தயாரிப்பதில் பயன்படுத்தப்படும் பொருட்கள் உடலை சூடாக வைத்திருக்கவும், சளியை கரைக்கவும் உதவுகின்றன. இதில் பச்சை மஞ்சள் பயன்படுத்தப்படுகிறது. மஞ்சளில் குர்குமின் என்ற கலவை உள்ளது, இது சளியை தளர்த்தும். இஞ்சி சளியை அகற்ற உதவுகிறது. இதில் உள்ள ஆன்டி – பாக்டீரியல்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் தொற்றுகளை எதிர்த்து போராட உதவுகிறது. கருப்பு மிளகு சாப்பிட்டால் சளி மற்றும் கபம் குறையும். இதன் காரணமாக நுரையீரலில்