500 ஊழியர்களை கோடீஸ்வரராக மாற்றிய தமிழர்.. ரூ.95,000 கோடி மதிப்பிலான நிறுவனம்.. யார் இவர்?
தான் மட்டும் சம்பாதிக்காமல் தன் ஊழியர்களையும் கோடீஸ்வரர்களாக்கி அழகு பார்த்த பிரபல தொழிலதிபர் யாரென்று தெரியுமா?
பிரபல பிசினஸ் மென்பொருள் தயாரிப்பு நிறுவனமான Freshworks நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி க்ரிஷ் மாத்ரூபூதம் பற்றிதான் இன்று பார்க்கப் போகிறோம். 2021-ம் ஆண்டு Freshworks நிறுவனத்தின் IPO வெளியான போது, அந்நிறுவனத்தில் வேலை பார்த்த 500-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் அனைவருக்கும் தன் நிறுவன பங்குகளை வழங்கி, ஒரே நாளில் அவர்களை கோடீஸ்வரர்களாக மாற்றினார் க்ரிஷ் மாத்ரூபூதம்.
இதில் குறைந்தது 70 ஊழியர்களவது 30 வயதிற்கும் குறைவானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டின் நடுத்தர குடும்பத்தில் பிறந்த க்ரிஷ் மாத்ரூபூதம் இந்நிலையை எட்டுவதற்கு முன்பு பல சிரமங்களை சந்தித்துள்ளார். கடன் வாங்கி தனது எம்பிஏ படிப்பை முடித்த மாத்ரூபூதம், இவ்வளவு பெரிய பிசினஸ் வெற்றியை எளிதாக பெற்றுவிடவில்லை. கடுமையாக உழைத்தால் நிச்சயம் ஒருநாள் பலன் தரும் என்று கூறுவார்களே. அதுதான் மாத்ரூபூதமின் வாழ்கையிலும் நடந்துள்ளது. இன்று இவரது நிறுவனத்தின் மதிப்பு எவ்வுளவு தெரியுமா? ரூ.95,000 கோடி.
திருச்சியை சொந்த ஊராக கொண்ட மாத்ரூபூதமின் தந்தை பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். பள்ளியில் சராசரி மாணவனாக இருந்த மாத்ரூபூதமால் பிரசித்தி பெற்ற ஐஐடி கல்லூரிக்கு தேர்வாக முடியவில்லை. இதனால் திருச்சியில் உள்ள ஷன்முகா கலை மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் பொறியியல் படிப்பை முடித்த க்ரிஷ், 1992-ம் ஆண்டு சென்னை பல்கலைகழகத்தில் தனது எம்பிஏ படிப்பை நிறைவு செய்தார். உறவினரின் கடன் உதவியால் படித்த காரணத்தால், பணத்தின் அருமையை அப்போதே உணர்ந்துகொண்ட க்ரிஷ், வாழ்க்கையில் பெரிதாக சாதிக்க வேண்டும் என முடிவெடுத்தார்.
கல்லூரி படிப்பை முடித்ததும் பல நிறுவனங்களை தொடங்கினார் க்ரிஷ். ஆனால் அனைத்தும் தோல்வியிலேயே முடிந்தது. இந்நிலையில் தனது நண்பர் ஷான் கிருஷ்ணசாமியுடன் இணைந்து 2010-ம் ஆண்டு சென்னையில் Freshworks நிறுவனத்தை தொடங்கினார். 2011-ம் ஆண்டு Freshworks நிறுவனத்தில் Accel நிறுவனம் ஒரு மில்லியன் அமெரிக்க டாலரை முதலீடு செய்தது. அந்த வருடமே அவர்களுக்கு முதல் வாடிக்கையாளரும் கிடைத்தார்கள். பின்னர் சிறிது நாட்களில் விற்பனை மற்றும் CRM தொடர்பான மென்பொருளை தயாரிக்கத் தொடங்கினார். இதற்கிடையில் 2021-ம் ஆண்டு தங்களது நிறுவனத்தின் பெயரை Freshdesk என மாற்றிக் கொண்டனர். அந்த ஆண்டே இவர்களுடைய நிறுவனத்தின் வருவாய் 300 மில்லியன் அமெரிக்க டாலரை எட்டியது.
Freshworks நிறுவனத்தின் மென்னொருள் விலை அதிகமாகவும் பயன்படுத்த கஷ்டமாக இருப்பதாகவும் பலர் கூறிய நிலையில், எளிதில் பயன்படுத்தக் கூடிய மென்பொருள்களை தயாரிக்கத் தொடங்கினர். மேலும் புதிதாக நிறுவனத்திற்கென வாடிக்கையாளர் சேவை மையத்தையும் தொடங்கினர். Freshworks அலுவலகம் சென்னையில் மட்டுமல்லாமல் பாரீஸ், நெதர்லாந்து, பிரான்ஸ் என உலகம் முழுவதும் உள்ளது. வெறும் எட்டே ஆண்டுகளில் மாத்ரூபூதமின் நிறுவனம் ஜிரோவிலிருந்து நூறு மில்லியன் அமெரிக்க டாலரை வருவாயாக ஈட்டியுள்ளது. இந்த வருமானம் அடுத்த 1.5 வருடங்களிலேயே 200 மில்லியன் அமெரிக்க டாலராக அதிகரித்தது. Freshworks நிறுவனத்தின் கார்ப்பரேட் அலுவலகம் அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் அமைந்துள்ளது.
இதுதவிர ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஜெர்மனி போன்ற நாடுகளிலும் இந்நிறுவனத்தின் அலுவலகம் உள்ளது. தற்போது 50,000 வாடிக்கையாளர்களுடன் Freshworks நிறுவனத்தின் மதிப்பு ரூ.95,000 கோடியாக உயர்ந்துள்ளது. ஒரு சாதாரண நடுத்தர குடும்பத்தில் பிறந்து, தன்னுடைய கடுமையான முயற்சியாலும், உழைப்பாலும் உலகம் முழுவதும் தனது நிருவனத்தை தொடங்கி பலருக்கும் உந்துசக்தியாக திகழ்கிறார் க்ரிஷ் மாத்ரூபூதம்.