தங்கலான் படத்தின் ரிலீஸ் அறிவிப்பை வெளியிட்டது படக்குழு… எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

பா.ரஞ்சித் இயக்கத்தில் ஞானவேல் ராஜா தயாரிப்பில் விக்ரம் நடித்திருக்கும் திரைப்படம் தங்கலான். இந்த திரைப்படத்தை பொங்கல் பண்டிகைக்கு வெளியிட முதலில் திட்டமிட்டனர். ஆனால் அயலான் உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாவதால் ஜனவரி 26 ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டனர்.

இருந்தாலும் அந்த தேதியில் படத்தை வெளியிட முடியாத சூழல் ஏற்பட்டது. இதன் காரணமாக தங்கலான் படத்தின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டது. மேலும் மே மாதம் வரை அந்த திரைப்படம் வெளியாவது கடினம் எனவும் திரைத்துறையில் கூறப்பட்டது. இந்த நிலையில் தயாரிப்பு நிறுவனம் ஏப்ரல் மாதம் தங்கலான் திரைப்படம் வெளியாகும் என அறிவித்திருக்கின்றனர்.

பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தின் வெளியீடு பலமுறை தள்ளி சென்றாலும் இந்த கோடை விடுமுறைக்கு நிச்சயம் வெளியாகிவிடும் என தெரிவிக்கின்றனர்.

https://twitter.com/StudioGreen2/status/1746872366679167387

தங்கலான் திரைப்படத்தில் விக்ரமுடன் பார்வதி மேனன், மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். மேலும் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

https://twitter.com/gvprakash/status/1746885055845429514

தங்கலான் திரைப்படத்திற்கான படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்து இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த திரைப்படத்தை திரைப்பட விழாக்களில் திரையிடவும் நடக்குழுவினர் திட்டமிட்டிருக்கின்றனர்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *