நான் கேப்டனாக வந்ததில் இருந்தே டீமில் இந்த பிரச்சனை இருக்கு.. ரோஹித் குமுறல்.. கோலி தான் காரணமா?

இந்திய டெஸ்ட் அணி கேப்டனாக தான் நியமிக்கப்பட்டதில் இருந்து தன்னால் அனைத்து டெஸ்ட் அணி வீரர்களையும் கொண்ட அணியை தேர்வு செய்ய முடியவில்லை என ரோஹித் சர்மா கூறி இருக்கிறார்.

தற்போது நடைபெற்று வரும் இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இதுவரை நடந்த போட்டிகளில் இந்திய அணியில் பல டெஸ்ட் அணி வீரர்கள் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது. விராட் கோலி தனிப்பட்ட காரணத்தால் மொத்த தொடரில் இருந்தும் விலகினார். கே எல் ராகுல் காயத்தால் முதல் போட்டிக்கு பின் வெளியேறினார்.

ரவீந்திர ஜடேஜா மற்றும் பும்ரா ஒரு போட்டியில் பங்கேற்கவில்லை. டெஸ்ட் அணி விக்கெட் கீப்பர் கடந்த ஓராண்டாகவே காயத்தால் அணியில் இடம் பெற முடியாமல் இருக்கிறார். இந்த நிலையிலும், இங்கிலாந்து அணியை 3 – 1 என வீழ்த்தி டெஸ்ட் தொடரைக் கைப்பற்றி இருக்கிறது இந்திய அணி. தொடரில் இன்னும் கடைசி போட்டி மீதமுள்ள நிலையில் இந்த தொடர் குறித்து ரோஹித் சர்மா பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய போது தான் கேப்டனாக வந்ததில் இருந்து தன்னால் முழு இந்திய டெஸ்ட் அணியை தேர்வு செய்ய முடியவில்லை என குறிப்பிட்டு இருக்கிறார். சிலர் விராட் கோலி இந்த தொடர் முழுவதும் ஆடாமல் விலகியதை தான் ரோஹித் சர்மா குறிப்பிடுகிறார் என சமூக ஊடகங்களில் கருத்து கூறி வருகின்றனர்.

ரோஹித் சர்மா இது பற்றி பேசுகையில், “நான் எதிர்காலத்தை தீர்மானிக்கவில்லை. தொடர் துவங்கும் போது எங்கள் அணியின் பலம் என்ன, எதிரணியின் பலம் என்ன என்பது எங்களுக்கு தெரியும். என்னுடைய பணி பேட்டிங் செய்வது. நான் ரன் குவிக்க வேண்டும். நான் கேப்டன் ஆனதில் இருந்து எனக்கு முழு டெஸ்ட் அணியும் கிடைக்கவில்லை. இதை ஒரு சாக்காக எடுத்துக் கொள்ளவில்லை. அணியின் சூழ்நிலையை நல்ல நிலையில் வைத்துக் கொள்ள முயல்கிறோம். இங்கிலாந்து சிறப்பாக ஆடும் போது, நல்ல ஷாட்கள் ஆடும் போது நாங்கள் அமைதியாக இருக்க வேண்டும். எங்களை நாங்களே ஆதரிக்க வேண்டும்” என்றார்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *