2023ல் கோலிவுட்டை உலுக்கிய எதிர்பாராத நட்சத்திரத்தின் மரணங்கள்
இந்த ஆண்டு சில நட்சத்திரங்கள் நம்மை விட்டு பிரிந்துள்ளனர், அவர்களின் அகால மரணம் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 2023ல் கோலிவுட் ரசிகர்களை உலுக்கிய எதிர்பாராத மரணங்கள் குறித்து பார்க்கலாம்
மயில்சாமி
தமிழ் சினிமாவில் பிரபலமான நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக இருந்தவர், மயில்சாமி. அவர் பல வெற்றிகரமான பாத்திரங்களை வழங்கினார். மயில்சாமி சென்னையில் உள்ள பிரபல கோயிலில் நடந்த மகா சிவராத்திரி விழாவில் கலந்து கொண்டு, பிப்ரவரி 19 ஆம் தேதி அதிகாலை வீடு திரும்பினார்.
வீடு திரும்பிய சில மணி நேரத்தில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு, தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் மருத்துவமனை செல்வதற்கு முன்பே உயிரிழந்தார்.
மனோ பாலா
பிரபல நகைச்சுவை நடிகரும் இயக்குனநமான மனோ பாலா உடல்நலக்குறைவு காரணமாக மே 3 அன்று காலமானார். அவருக்கு வயது 69. உடல் நலக்குறைவால் குணமடைந்து வந்த மனோ பாலா திடீர் மறைவு ரசிகர்களையும் குடும்ப உறுப்பினர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
சரத்பாபு
சரத்பாபுமே, 22 அன்று காலமானார். உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், உடல் உறுப்புகள் செயலிழந்ததைத் தொடர்ந்து, சரத்பாபு கடந்த மே 22 ஆம் தேதி தனது இறுதி மூச்சை விட்டார்.
மாரிமுத்து
எதிர்நீச்சல் சீரியலில் ரசிகர்களை கவர்ந்தவர் மாரிமுத்து. பிஸியான வேலையின் காரணமாக, மாரிமுத்து ஓய்வின்றி உழைத்துக்கொண்டிருந்தார், செப்டம்பர் 8 அதிகாலையில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டடு, அகால மறணம் அடைந்தார்.ரசிகர்கள் நிம்மதி அடைந்தபோது, டிசம்பர் 27 அன்று விஜயகாந்த் மீண்டும் ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், அவருக்கு கோவிட்-19 இருப்பது சோதனை செய்யப்பட்டது. ஆனால் இந்த முறை அவர் குணமடையத் தவறி மரணமடைந்தார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
விஜயகாந்த்
150 படங்களுக்கு மேல் நடித்தவர் நடிகர், விஜயகாந்த். கடந்த டிசம்பர் 28 ஆம் தேதி காலை காலமானார். கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த், ஒரு மாதத்திற்கும் மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சமீபத்தில் வீடு திரும்பினார்.சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன: