சிறகடிக்க ஆசை மீனா கண்கலங்கி வெளியிட்ட வீடியோ.. அதிர்ச்சியில் ரசிகர்கள்
சிறகடிக்க ஆசை சீரியலில் நாயகியாக நடித்து வரும் பிரபல நடிகை கண்ணீருடன் வெளியிட்டுள்ள காணொளி வைரலாகி வருகின்றது.
சிறகடிக்க ஆசை
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சீரியலில் சிறகடிக்க ஆசை என்ற சீரியலும் ஒன்றாகும். டிஆர்பி-யிலும் டாப்பில் இருக்கும் இந்த சீரியலில் மீனா கதாபாத்திரத்தில் நடிகை கோமதி பிரியா நடித்து வருகின்றார்.
ஏழை குடும்பத்து பெண்ணான மீனா புகுந்தவீட்டில் அனுபவிக்கும் கஷ்டம் ஒருபக்கம், பிடிக்காத கணவரை திருமணம் செய்து கொண்டு பின்பு ஏற்பட்ட காதல் என்று கதைக்களம் நகர்ந்து கொண்டிருக்கின்றது.
இதில் ஜோடியாக நடிக்கும் முத்து மீனா ஜோடியின் கெமிஸ்ட்ரி வேற லெவல் என்று தான் கூற வேண்டும்.
கண்கலங்கிய காணொளி
இந்நிலையில் நடிகை கோமதி பிரியா தற்போது இன்ஸ்டாகிராமில் கண்கலங்கியபடி காணொளி ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
“மிக அருகினில் இருந்தும் தூரமிது” என குறிப்பிட்டு தான் பிரிந்து இருக்கும் நெருக்கமான ஒருவரை நினைத்து வருத்தத்தில் இருப்பதாக கூறியுள்ளார்.
இந்த காணொளியினை அவதானித்த ரசிகர்கள் குறித்த நடிகைக்கு என்ன ஆச்சு? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.