வெஸ்ட் இண்டீஸ் ஆட்டம் பிரமிக்க வைக்கிறது.. தனிப்பட்ட முறையில் ஏமாற்றம்..புகழ்ந்து தள்ளிய ஆஸி.கேப்டன்
பிரிஸ்பேன் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 8 ரன்கள் வித்தியாசத்தில் பரப்பரப்பான வெற்றியை பெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணி 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியா மண்ணில் வெற்றியை பெற்று இருக்கிறது.
இந்த போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் சமர் ஜோசப் ஏழு விக்கெட்டுகளை கைப்பற்றி வெற்றிக்கு வித்திட்டார். இந்த நிலையில் தோல்வி குறித்து பேசிய ஆஸ்திரேலிய அணி கேப்டன் இந்த தோல்வி மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்திருப்பதாக கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர் இந்த போட்டி மிகவும் பிரமிக்கும் வகையில் இருந்தது. இது நிச்சயமாக சூப்பரான தொடராக அமைந்தது. குறிப்பாக வெஸ்ட் இண்டீஸ் வீரர் சம்மர் ஜோசப்பின் பந்துவீச்சு பிரமிக்கும் வகையில் இருந்தது. துரதிர்ஷ்டவசமாக நாங்கள் அவருடைய பந்துவீச்சை எதிர்கொள்ளும் அளவுக்கு சரியாக விளையாடவில்லை.
நேற்று 216 ரன்கள் இலக்கு என்று வெஸ்ட் இண்டீஸ் ஐ சுருட்டினோம். இதனால் நல்ல நம்பிக்கையுடன் இன்று நாங்கள் விளையாட வந்தோம். இந்த போட்டியில் வெற்றி பெற வாய்ப்பு இருக்கிறது என்று நினைத்தோம். ஸ்மித் தனி ஆளாக நின்று எங்களை வெற்றி வரை அழைத்து சென்றார். நேற்று கூட வெயில் கடுமையாக இருந்தது. ஆனால் எங்களுடைய வீரர்கள் தொடர்ந்து ஆக்ரோஷமாக பந்து வீசினர்.
அதன் நிச்சயம் மிகப்பெரிய உழைப்பாக நான் கருதுகிறேன். இந்தப் போட்டி எப்படி மாறும் என்பதை நாம் அனைவருமே அறிந்திருக்கிறோம். நீங்கள் உலகின் நம்பர் ஒன் அணியாக இருந்தும் உடனடியாக உங்களை அதுக்கு கீழே தள்ளிவிடும். மீண்டும் நீங்கள் ஜீரோவில் இருந்து தொடங்க வேண்டும்.
வெஸ்ட் இண்டீஸ் இந்த போட்டியில் விளையாடிய விதம் மகிழ்ச்சி அளிக்கிறது. ஒன்றுக்கு ஒன்று என்ற கணக்கில் தொடர் சமனாக முடிந்திருப்பது நல்ல முடிவாக நான் கருதுகிறேன். அடுத்தது நியூசிலாந்துக்கு சென்று அங்கு டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளோம். அந்தத் தொடரும் கடும் சவால்களை உங்களுக்கு கொடுக்கும் என்று நான் நம்புகிறேன் என கூறியுள்ளார்.