இஓவுக்கு ஊழியர் அனுப்பிய இந்த வாட்ஸ்அப் மெசேஜை உலகமே ஆச்சரியமாக பேசுது.. ஏன் தெரியுமா?

அவரது நிறுவனத்தைச் சேர்ந்த ஒரு ஊழியர் அங்கித் அகர்வாலுக்கு ஒரு விண்ணப்பத்தை மெசேஜ் செய்திருந்ததுதான் இதற்கு காரணம். அப்படி என்ன அதில் இருந்தது, இதில் ஆச்சரியப்பட ஏதும் உள்ளதா, அல்லது இதெல்லாம் ஒரு மேட்டரே இல்லையா என்பதிலேயே வாத விவாதங்கள் ஆரம்பித்துவிட்டன. அங்கித் அகர்வாலுக்கு அனுப்பிய அந்த மெசேஜில் லேட் நைட் பார்ட்டியில் கலந்து கொள்ள வேண்டியிருப்பதால் தனக்கு லீவு தருமாறு அந்த ஊழியர் கேட்டிருந்தார். அதற்கு அங்கித் அகர்வாலின் ரியாக்ஷ்ன் நிறுவனங்களின் லீவு கொள்கையையே திருத்தியமைப்பது பற்றிய விவாதத்தை கிளப்பியுள்ளது

இது பற்றி அங்கித் அகர்வால் கூறுகையில், எனது வாட்ஸ் அப்புக்கு இன்று ஒரு மெசேஜ் வந்தது. அதில் ஒரு ஊழியர் தான் ஒரு லேட் நைட் பார்ட்டியில் கலந்து கொள்ள வேண்டும் என்பதால் அதற்காக அவருக்கு லீவு தரவேண்டும் என்று கூறியிருந்தார். பொய் சொல்லாத, அவரது இந்த வெளிப்படையான செயல் தங்களது டீமில் இருப்பவர்கள் பரஸ்பரம் நம்பிக்கை வைத்திருப்பார்கள் என்பதையும் தங்களை அவர்கள் சப்போர்ட் செய்வார்கள் என்று அவர் நம்புவதையும் சுட்டிக் காட்டுகிறது. இப்படி ஊழியர்கள் வெளிப்படையாகவும், நேர்மையுடனும் இருந்தால் நிறுவனத்தின் செயல்பாடுகள் உறுதியாகும். சிறப்பான கம்யூனிகேஷன் மற்றும் நம்பிக்கைகளை வளர்க்கும் என்றார்

இருந்தால் நிறுவனத்தின் செயல்பாடுகள் உறுதியாகும். சிறப்பான கம்யூனிகேஷன் மற்றும் நம்பிக்கைகளை வளர்க்கும் என்றார். அத்துடன் அந்த ஊழியர் கேட்டுக் கொண்டபடி அவருக்கு லீவும் தந்துள்ளார் அகர்வால். இந்த விஷயம் சோசியல் மீடியாவில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அங்கீத் அகர்வாலுக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது. அதேவேளையில் கம்பெனிகள் தங்களது லீவு கொள்கைகளை ஊழியர்களுக்குப் பயன்படும் வகையில் திருத்தியமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் சமூக தளங்களில்

அங்கீத் அகர்வால் போன்று பெருந்தன்மையுடன் நடந்து கொள்வதில்லை. எனவே ஒட்டுமொத்தமாக நிறுவனங்கள் தங்களது லீவு பாலிசியை மாற்றினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று ஒருவர் லிங்க்டினில் பதிவிட்டுள்ளார். இதுபற்றி சமீனா ஹதியாரி என்ற பதிவர் பகிர்ந்துள்ள பதிலில், இதைத்தான் இன்றைய தேவையாகச் சொல்வேன். எனது கடந்த கால வேலை அனுபவத்தில் லீவுக்கான உண்மையான காரணத்தைச் சொல்ல வேண்டும் என்று டீம் லீடர் வலியுறுத்துவார். ஆனால்,நாம் ஏதாவது சுபகாரியங்கள் அல்லது உடல்நலம் சரியில்லை என்று காரணம் கூறினால் லீவு தரப்படுவதில்லை. இதற்காக உறவினர்கள் இறந்துவிட்டதாக பொய்

சொல்லி பல முற ைலீவு வாங்கியுள்ளேன். எனவே, அங்கீத் அகர்வால் செய்திருப்பது பாராட்டுக்குரியது என்று கூறியுள்ளார்

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *