உலகே வியக்குது… அயோத்தியில் குவியுது… நாளை ராமர் பிரான பிரதிஷ்டை விழா… உலகம் முழுவதும் கொண்டாட்டம்!
மொத்த உலகத்தின் பார்வையும் இந்தியாவின் மீது படிந்திருக்கிறது. நாளை அயோத்தி ராமர் பிரான பிரதிஷ்ட்டை விழாவை உற்று நோக்குகிறது.
இந்தியர்கள் ஒற்றுமையுடன் அயோத்தி விழாவால் உற்சாகமடைந்துள்ளனர். இஸ்லாமிய சகோதரர்கள் உலகின் நீளமாக புல்லாங்குழல் செய்து அயோத்தி ராமருக்கு அன்பளிப்பாக அளித்துள்ளனர். இன்னொரு இஸ்லாமிய சகோதரி, 1565 கி.மீட்டருக்கும் மேல் நடைப்பயணமாக அயோத்தி ராமரை தரிசிப்பதற்காக நடைப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
நாளை பிற்பகல் 12 மணிக்கு உத்திரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் செய்யப்பட உள்ளது. இந்தியப் பிரதமர் மோடி மற்றும் விளையாட்டு வீரர்கள், திரைப்பட நட்சத்திரங்கள், ஆன்மீகத் தலைவர்கள் மற்றும் தொழிலதிபர்கள் என உலகம் முழுவதும் இருந்து 12000 பேர் வரை கலந்து கொள்ள இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஜனவரி 22ம் தேதி ஏன் தேர்ந்தெடுக்கப்பட்டது. அன்றைய தினம் அபிஜித் நட்சத்திரம் பிறப்பதாக பஞ்சாங்கங்கள் தெரிவிக்கின்றன.
இந்து புராணங்களின்படி, அபிஜித் முஹுரத் , மிருகசீர்ஷ நட்சத்திரம் , அமிர்த சித்தி யோகம் மற்றும் சர்வார்த்த சித்தி யோகா சங்கமத்தில் தான் ராமர் பிறந்தார் . அதே நட்சத்திரம் வருவதால் 22 ஜனவரி 2024 அன்று ராம் லல்லா சிலை நிறுவப்படுகிறது.
வேத ஜோதிடத்தின்படி, அபிஜித் முஹூர்த் என்பது நாளின் மிகவும் மங்களகரமான மற்றும் சக்திவாய்ந்த நேரம். இது சுமார் 48 நிமிடங்கள் மட்டுமே நீடிக்கும். இது சூரிய உதயத்திற்கும் சூரிய அஸ்தமனத்திற்கும் இடையிலான 15 நிமிடங்களில் 8 வது நிமிடமாக உள்ளது. 22 ஜனவரி 2024 அன்று, அபிஜித் முஹுரத் இந்திய நேரப்படி பிற்பகல் 12:16 மணிக்குத் தொடங்கி 12:59 மணிக்கு முடிவடைகிறது. இக்காலத்தில் சிவபெருமான் திரிபுரசுரன் என்ற அரக்கனை வதம் செய்ததால் இந்துக்களுக்கு சுபமான நேரம். இந்த காலம் ஒருவரது வாழ்க்கையிலிருந்து எதிர்மறை ஆற்றல்களை நீக்கவல்லது.