உலகின் மிகப்பெரிய எண்ணெய் விளக்கு அயோத்தியில் ஏற்றப்படவுள்ளது..!
ராமர் கோயில் திறப்பு விழா அன்று மாலை 5 மணிக்கு உலகின் மிகப்பெரிய எண்ணெய் விளக்கு ஏற்றப்படும் என ஜகத்குரு பரமான்ச ஆச்சாரியா தெரிவித்துள்ளார்.
இந்த விளக்கிற்கு 1.25 குவிண்டால் அளவிலான பட்டுத்திரியும், 21,000 லிட்டர் எண்ணெயும் பயன்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். நாட்டின் பல்வேறு இடங்களிலிருந்து கொண்டுவரப்பட்ட மண், நீர் மற்றும் மாட்டுப்பாலில் தயாரிக்கப்பட்ட நெய்யும் கொண்டு இந்த விளக்கு உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த விளக்கை 108 குழுக்கள் இணைந்து ஒரு வருடம் உழைத்து உருவாக்கியுள்ளதாக ஜகத்குரு பரமான்ச ஆச்சாரியா தெரிவித்துள்ளார். இதை உருவாக்குவது எளிதான விஷயமல்ல எனவும் கூறினார். இந்த விளக்கிற்கு பயன்படுத்தப்படும் எண்ணெய், சீதாவின் தாய்நாட்டில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.