மலைப் பாறையில் இருந்து தங்கத்தை வெட்டி எடுத்த இளைஞர்கள்: ஆச்சரியத்தில் உறைந்த நெட்டிசன்கள்
இரண்டு இளைஞர்கள் இணைந்து மலைத் தங்கத்தை வெட்டி எடுக்கும் காட்சிகள் இணையத்தில் வைரலானதை தொடர்ந்து சமூக ஆர்வலர்கள் அதற்கு தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
சமூக ஊடகத்தில் வைரலான வீடியோ
சமீபத்தில் இணையத்தில் வைரலான வீடியோ ஒன்றில் இரண்டு இளைஞர்கள் மண்ணில் இருந்து தங்கத்தை எடுக்கும் நோக்கில் மலைப் பாறைகளை தோண்டுவதை பார்க்க முடிகிறது.
அதில், அந்த இளைஞர்கள் தோல் காலணியை அணிந்து இருப்பதோடு, பெரிய இரும்பு கம்பிகளுடன் பாறைகளை துண்டுத் துண்டாக உடைகின்றனர்.
இறுதி சிறிய துண்டங்களை கண்டுபிடித்த அவர்கள், அவற்றை நெருக்கமாக உற்று நோக்கும் போது அவை பளபளப்பான உலோகத்தை கொண்டு இருக்கின்றன.
அந்த உலோகம் உலகின் விலையுயர்ந்த தங்கம் என்பதையும் கண்டுபிடிக்கின்றனர். இந்த வீடியோவை மைல்ஸ் என்ற இன்ஸ்டாகிராம் பயனாளர் VA கோல்ட் ப்ராஸ்பெக்டிங் என்ற தலைப்பில் வெளியீடுகிறார்.
வியப்பில் நெட்டிசன்கள்
இப்படி யாரும் எதிர்பாராத சூழ்நிலையில், தங்கம் கிடைத்ததை பார்த்த நெட்டிசன்கள் ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளனர். மேலும் தங்கத்தை வெட்டி எடுக்கும் செயல்முறை குறித்த தங்கள் ஆர்வத்தையும் வெளிப்படுத்தியுள்ளனர்.
சில சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தங்கத்தை இவ்வாறு இயற்கையான சூழ்நிலையில் இருந்து வெட்டி எடுக்கும் நடைமுறையில் உள்ள சுற்றுச்சூழல் அழிவு குறித்து தங்கள் கவலையை வெளிப்படுத்தி வருகின்றனர்.