இந்தியாவில் ஆண்டுதோறும் 1 கோடி திருமணங்கள் நடக்கிறது.. இதில் டக்கரான பிசினஸ் வாய்ப்பும் உள்ளது..!
சுபமுகூர்த்த காலம் வந்துவிட்டால் போதும் நாடே பரபரப்பாகிவிடும். கூட்டம் கூட்டமாகச் சென்று திருமணத்துக்குத் தேவையான நகைகள், ஆடைகள், பொருட்களை வாங்கிக் குவிப்பார்கள்.
நல்ல வசதியான திருமண மண்டபவங்களை தேடித்தேடி அலைந்து புக் செய்வார்கள். மணமக்கள் மற்றும் உறவினர்கள் மகிழ்ச்சியில் திருவிழாக் கோலம் பூண்டிருக்கும். அப்படி இந்தியாவில் ஆண்டுதோறும் 1 கோடிக்கும் மேலான திருமணங்கள் நடப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இப்படி பிஸியான திருமணக் காலங்களில் கேட்டரிங் சர்வீஸ், மலர் டெக்கரேட்டர்ஸ், இசைக் கச்சேரிக் குழு, பியூட்டீசியன் சர்வீஸ், கேப்கள் ஆகிய தொழிலுக்கு மிகப் பெரிய மவுசு இருக்கும். சராசரியாகப் பார்த்தால் இந்தியாவில் நாளொன்று 30,000 திருமணங்கள் என்றக் கணக்கில் ஆண்டுக்கு 1 கோடி திருமணங்கள் நடைபெறுகின்றன. அப்படிச் சொல்வது போல தினமும் திருமணங்கள் நடக்காது. குறிப்பிட்ட சுபமுகூர்த்த நாட்களில் மட்டுமே நடக்கும். குறிப்பாக மே, ஜூன், நவம்பர், டிசம்பர் ஆகிய மாதங்களில் மட்டும் 70 லட்சம் திருமணங்கள் நடைபெறுகின்றன. இதனால் அந்த நாட்களில் மேலே சொன்ன கேட்டரிங் போன்ற வகையறாவுக்கு ஆள் கிடைக்காமல் சிரமத்துக்கு ஆளாக நேரிடும். திருமணத்துக்குப் பல மாதங்களுக்கு முன்பே அதற்காக முன்பணம் தந்து புக் செய்து கொள்ள வேண்டும். இதில் குறிப்பிடும்படியான அம்சம் என்னவென்றால் மணப்பெண் அலங்காரம். திருமணம், ரிசப்ஷன் மட்டுமல்லாமல் இப்போதெல்லாம் பெரு நகரங்களில் மருதாணி போடும் சடங்கும் நடைபெறுகிறது. இதனால் பியூட்டீஷியன் தேவை மிக அதிகளவில் இருக்கிறது. ஆனால் அந்தளவுக்கு பியூட்டீஷியன்கள் ஒரேநாளில் கிடைப்பதில்லை. இந்த நிலையில் பியூட்டீஷியன் தட்டுப்பாட்டை உணர்ந்து லாக்மே அகாதமியின் ஆப்டெக் மணப்பெண் அலங்கார பயிற்சிகளை சிறப்பாக அளித்து புதிதுபுதிதாக பியூட்டீஷன்களை உருவாக்கி வருகிறது. இதன் மூலம் சிறந்த மணப்பெண் அலங்கார நிபுணர்கள் உருவாகின்றனர்.