பேரிச்சம் பழம் தினமும் சாப்பிடுவதால் கிடைக்கும் ஏராளமான நன்மைகள்!
பேரிச்சம் பழத்தில் அதிக அளவிலான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதால் தினமும் உட்கொண்டால் தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும்.
காப்பர், பொட்டாசியம், நார்ச்சத்து, வைட்டமின் பி6, மெக்னீசியம் போன்றவை பேரிச்சம் பழத்தில் அதிக அளவில் உள்ளது. வைட்டமின் ஏ குறைபாட்டால் ஏற்படும் கண் பார்வை பிரச்சனைகளை குணப்படுத்த பேரிச்சம்பழம் மிகச்சிறந்த மருந்தாகும்.
மாலைக்கண் நோய் போன்றவற்றை குணப்படுத்துவதற்காக பேரிச்சம் பழத்தை தேனுடன் சேர்த்து ஊற வைத்து சாப்பிட்டு வர உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கும்.
இதனால் கண் பார்வை கோளாறுகள் சரியாகும். பேரிச்சம்பழம் உண்பதால் செரிமான மண்டலம் ஆரோக்கியமாக இருக்கும். சீரற்ற குடல் இயக்கம், மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் இருந்தால் தினமும் பேரிச்சம்பழம் உட்கொள்வதால் தீர்வு கிடைக்கும்.
இதில் உள்ள அதிக அளவில் நார்ச்சத்து குடல் புற்றுநோய் வராமல் காக்கும். பேரிச்சம்பழத்துடன் பாதாம் சேர்த்து பாலில் கலந்து கொதிக்க வைத்து சாப்பிட்டு வந்தால் நரம்பு தளர்ச்சி நீங்கி, ஞாபக சக்தி அதிகரிக்கும்.
பேரிச்சம் பழத்தில் உள்ள மெக்னீசியம் கமனிகளில் ஏற்பட்டுள்ள வீக்கத்தை குறைத்து இதய நோய்கள் வராமல் தடுக்கும். கர்ப்ப காலங்களில் பேரிச்சம் பழத்தை சாப்பிட்டு வந்தால் பிரசவம் முடிந்த பிறகு உடல் எடையை குறைக்க உதவியாக இருக்கும்.