ரயிலில் ஸ்பீடா போகும் போது கிளாஸ் நிறைய தண்ணி வச்சாலும் ஒரு சொட்டு கூட சிந்தாது! வருது புது வந்தே பாரத்

இந்தியாவில் வரும் 2025-ம் ஆண்டு பயன்பாட்டுக்கு வரவுள்ள நூறு வந்தே பாரத் ரயில்களில் டில்டிங் தொழில்நுட்பம் பொருத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக இந்திய ரயில்வே வெளிநாட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொண்டு இந்த தொழில்நுட்பத்தை தயார் செய்துள்ளது. டில்டிங் தொழில்நுட்பம் என்றால் என்ன? ஏன் 100 ரயில்களுக்கு மட்டும் இந்த தொழில்நுட்பம் பொருத்தப்படுகிறது? இதனால் என்ன பயன் என்ற விரிவான விபரங்களை எல்லாம் காணலாம் பாருங்கள்.
தற்போது இந்தியா முழுவதும் வரிசையாக வந்தே பாரத ரயில்கள் அறிமுகமாகி கொண்டே இருக்கின்றன. பல முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் வந்தே பாரத் ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. வந்தே பாரத் ரயில் சாதாரண ரயிலை விட அதிக வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் அதிக வசதிகள் மற்றும் தொழில்நுட்ப அம்சங்கள் இருப்பதால் இந்த ரயில் வெளிநாட்டு புல்லட் ரயில்களுக்கு இணையாக பார்க்கப்படுகிறது
மத்திய அரசு இந்த வந்த ரயில் திட்டத்தை விரிவாக செய்ய வேண்டும் என முடிவெடுத்தபோது மொத்தம் 400 ரயில்களை உருவாக்க வேண்டும் என்ற முடிவை எடுத்தது. அதில் 100 ரயில்கள் தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட வேண்டும் என முடிவெடுத்தது. அது என்ன டில்டிங் தொழில்நுட்பம் என உங்கள் எல்லோருக்கும் ஒரு ஆச்சரியம் ஏற்படலாம் அதைப் பற்றி நாம் தெரிந்து கொள்ளும் முன்னர் சில விஷயங்களை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
இந்த டேட்டிங் தொழில்நுட்பம் என்பது இந்தியாவிற்கு ஒன்றும் புதுமையான விஷயம் அல்ல. தொழில்நுட்பம் ஏற்கனவே உலகில் 11 நாடுகளில் பயன்பாட்டில் இருக்கிறது. இத்தாலி போர்ச்சுகல், ஸ்லோவேனியா, பின்லாந்து, ரஷ்யா, செக் குடியரசு, லண்டன், ஸ்விட்சர்லாந்து, சீனா, ஜெர்மனி, ரோமானியா, ஆகிய நாடுகளில் இந்த தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட ரயில்கள் தற்போது பயன்பாட்டில் உள்ளன.