”சீட் ஒதுக்குவதில் சமரசமே கிடையாது”: இண்டியா கூட்டணியில் முரண்டு பிடிக்கும் மாநில கட்சிகள்

மேற்குவங்கத்தில் திரிணமுல் காங்., தலைவர் மம்தா மற்றும் மஹாராஷ்டிராவில் உத்தவ் சிவசேனா அணியின் சஞ்சய் ராவத் உள்ளிட்டோர் தங்கள் மாநிலத்தில் தங்களுடைய கட்சியே அதிக இடங்களில் போட்டியிடும் என்றும், சீட்களை ஒதுக்குவதில் சமரசம் கிடையாது என்றும் தெரிவித்துள்ளனர்.அடுத்தாண்டு லோக்சபா தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராக எதிர்க்கட்சியினர் ஒன்றிணைந்து ‘இண்டியா’ கூட்டணியை உருவாக்கினர்.

இதில் இதுவரை தலைவர், பிரதமர் வேட்பாளர் போன்றவற்றை உறுதி செய்யவில்லை. தொகுதி பங்கீடு தொடர்பான பிரச்னைகளை கூட்டணியினர் விரைவில் ஆலோசித்து முடிவெடுக்க உள்ளனர். இதற்கிடையே திரிணமுல் காங்., தலைவரும், மேற்குவங்க முதல்வருமான மம்தா, கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு, அந்தந்த மாநிலத்தில் உள்ள பெரிய கட்சியே முடிவெடுக்கும் என கூறியிருந்தார். அதாவது, ‘காங்கிரஸ் தேசிய கட்சியாக இருந்தாலும், எங்கள் மாநிலத்தில் நாங்கள்தான் அக்கூட்டணிக்கு தலைமை, உ.பி.,யில் சமாஜ்வாதியே தலைமை, பஞ்சாப்பில் ஆம்ஆத்மியே தலைமை’ எனப் பேசியிருந்தார்.

இதனால் கூட்டணிக்குள் குழப்பம் ஏற்பட்டது.எங்களால் மட்டுமே முடியும்இந்த நிலையில், தொகுதிகள் ஒதுக்குவது தொடர்பாக மம்தா மீண்டும் பரபரப்பு கருத்தை தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், ”நாடு முழுவதும் இண்டியா கூட்டணி போட்டியிடும்.

மேற்குவங்கத்தில் பா.ஜ.,வுக்கு எதிராக திரிணமுல் காங்., கட்சி போட்டியிட்டு அவர்களை வீழ்த்தும். நினைவில் வைத்துக்கொள்ளுங்கள், இங்கு (மேற்குவங்கத்தில்) பா.ஜ.,வுக்கு எங்களால் மட்டுமே பாடம் புகட்ட முடியும்; வேறு எந்த கட்சியாலும் அது முடியாது” என்றார்.மஹாராஷ்டிராஅதேபோல், மஹாராஷ்டிராவில் உத்தவ் சிவசேனா அணியின் சஞ்சய் ராவத் கூறுகையில், ”மஹா.,வில் சிவசேனா தான் பெரிய கட்சி. காங்கிரஸ் தேசிய கட்சி என்பதால், எங்கள் தலைவர் உத்தவ் தாக்கரே, காங்., தலைவர்களான ராகுல், சோனியா, மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்டோருடன் நேர்மறையான விவாதங்களை நடத்தி வருகிறார். அதேபோல், லோக்சபா தேர்தலில் மஹாராஷ்டிராவில் 23 தொகுதிகளில் சிவசேனா போட்டியிடும் என்பதையும் நாங்கள் கூறிவருகிறோம்.

இதில் சமரசமே கிடையாது” எனக் கூறினார்.இண்டியா கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இப்போதுதான் துவங்கியுள்ள நிலையில், அதற்குள் மற்ற கட்சிகளுக்கு ‘சீட்’களை விட்டுக்கொடுக்க முடியாது என்பதை திரிணமுல் காங்., உத்தவ் சிவசேனா அணி உள்ளிட்ட கட்சிகள் தெரிவித்து வருவது, லோக்சபா தேர்தல் வரை இக்கூட்டணி நீடிக்குமா அல்லது தொகுதி பங்கீட்டில் பிரச்னை ஏற்பட்டு பிரிந்து விடுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *