சுக்குக்கு மிஞ்சிய வைத்தியமில்லை… இதன் அர்த்தம் என்ன தெரியுமா ?
* சுக்குடன் சிறிது பால் சேர்த்து மைய அரைத்து நன்கு சூடாக்கி இளஞ்சூடான பதத்திற்கு ஆறினதும் வலியுள்ள கை, கால் மூட்டுகளி பூசிவர மூட்டுவலி முற்றிலும் குணமாகும்.
பித்த உடல்வாகு உடையவர்கள், சுக்கைத் தூள் செய்து எலுமிச்சை சாறுடன் கலந்து குடித்தால் பித்தம் விலகும்.
* சுக்கு, மிளகு, தனியா, திப்பிலி, சித்தரத்தை இலை அனைத்தையும் சேர்த்து கஷாயம் செய்து தொடர்ந்து மூன்று நாட்கள் குடித்து வந்தால் எப்படிப்பட்ட கடுமையான சளியாக இருந்தாலும் மூன்றே நாட்களில் குணமாகிவிடும்.
* தயிர் சாதத்துடன் சிறிது சுக்குப்பொடி சேர்த்து சாப்பிட்டால், வயிற்றுப்புண் ஆறும் சுக்கு, மிளகு, பூண்டு, வேப்பிலை இவைகளைச் சேர்த்து கஷாயம் செய்து, தினம் மூன்று வேலை வீதம் இரண்டு நாட்கள் குடித்துவர விஷக்காய்ச்சல் குறையும்.
* சுக்கு, மிளகு, சீரகம் இட்டு என்ணெய் காய்ச்சி தலைக்குத் தேய்த்துக் குளித்துவர, நீர்கோவை நீங்கும். ஈர், பேன் ஒழியும். சுக்குத்தூளுடன் உப்பு சேர்த்து பல் துலக்கிவர, பல்வலி தீரும் ஈறுகள் பலம் பெறும்.
* இஞ்சி காய்ந்தால், சுக்கு. காரம், மணம் நிறைந்த சுக்கு, உடம்பில் சூட்டை ஏற்படுத்தும். அதே வேளையில் பசியைத் தூண்டுவதோடு இரைப்பை வாயுத் தொல்லையை போக்கக்கூடியது.
* தலைவலிக்கு சுக்கை நீர் விட்டு அரைத்தோ, உரசியோ (இழைத்து) நெற்றியில் பூசினால், அடுத்த சில நிமிடங்களில் கைமேல் பலன் கிடைக்கும். தண்ணீருக்குப் பதிலாக பால் விட்டு அரைத்தும் பயன்படுத்தலாம். எந்த விதமான தலைவலி வந்தாலும் இந்த சுக்கை நெற்றியில் பற்று (பத்து) போட்டால் அடுத்த சில நிமிடங்களில் நிவாரணம் கிடைக்கும். வலி இருக்கும் இடங்களில் சுக்கை தேய்த்தால் இதமாக இருக்கும். வலி விலகியதும் எரிச்சலை ஏற்படுத்தும். அப்படியானால் தலைவலி சரியாயிற்று என்று அர்த்தம். உடனே ஒரு துணியால் நெற்றிப் பற்றை துடைத்தோ, கழுவியோ விடலாம்.
* வயிற்றுப் பொருமல், வயிற்று வலி, விலாப்பகுதியில் ஏற்படும் குத்தல், குடைச்சல், புளித்த ஏப்பம், அஜீரணக்கோளாறு, மார்பில் எரிச்சல், மூக்கடைப்பு, ஜலதோஷம், காதில் குத்தல் வலி, நாக்கு சுவையின்மை மற்றும் மூட்டுக்களில் வலி ஏற்படும் நேரங்களிலும் இந்த சுக்கு கைகொடுக்கும். 100 மில்லி கொதிக்கும் நீரில் 5 கிராம் சுக்குப்பொடியை சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கி கால் மணி நேரம் மூடி வைத்து எடுத்து தேன் அல்லது சர்க்கரை கலந்து குடிக்க வேண்டும். இந்த சுக்கு கஷாயத்தை காலையில் குடித்தது போலவே மாலையிலும் குடிக்க வேண்டும். இப்படி 20 முதல் 40 நாட்கள் வரை செய்து வந்தால் மேலே சொன்ன பிரச்னைகள் எல்லாம் விலகும். சுக்குக் கஷாயத்துடன் ஏலக்காய் சேர்த்துக்கொள்ளலாம். பனிக்காலங்களில் கிராம்பு, மிளகுத்தூள் சேர்த்துக்கொள்ளலாம்.