“கோலியும் இல்ல.. வயசு 37 ஆச்சு.. ரெண்டே சதம்தான்” – ரோகித் சர்மாவை ஆஸி லெஜன்ட் விமர்சனம்
ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியாவுக்கு எதிராக இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்ட பொழுது, அந்த அணி இந்தியாவில் எப்படி தங்களுடைய பாஸ்பால் முறையை விளையாடும் என்கின்ற கேள்வியும் எதிர்பார்ப்பும் இருந்தது.
மேலும் இங்கிலாந்து அணியின் இளம் நட்சத்திர பேட்ஸ்மேன் ஹாரி ப்ரூக் தனிப்பட்ட காரணங்களுக்காக இங்கிலாந்து திரும்பி விட்டார். இதெல்லாம் இங்கிலாந்து அணியின் பெரிய பின்னடைவாக பார்க்கப்பட்டது.
மேலும் இங்கிலாந்து அணியின் இளம் நட்சத்திர பேட்ஸ்மேன் ஹாரி ப்ரூக் தனிப்பட்ட காரணங்களுக்காக இங்கிலாந்து திரும்பி விட்டார். இதெல்லாம் இங்கிலாந்து அணியின் பெரிய பின்னடைவாக பார்க்கப்பட்டது.
மேலும் எதிர்பாக்கப்பட்டது போலவே நான்கு நாட்கள் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் முதல் இரண்டு நாட்களில் இங்கிலாந்து தோல்விக்கு மிக நெருக்கத்தில் இருந்தது. எனவே இது வழக்கமான இந்திய சுற்றுப்பயணம் ஆகத்தான் இருக்கும் என இங்கிலாந்தை அனைவரும் கணித்தனர்.
இந்த நிலையில் தான் அவர்கள் மீண்டு வந்து ஒரு மறக்க முடியாத டெஸ்ட் வெற்றியை இந்தியாவுக்கு எதிராக இந்திய மண்ணில் பதிவு செய்திருக்கிறார்கள். இது பலரையும் ஆச்சரியப்படுத்திய வெற்றியாக அமைந்திருக்கிறது.
இதுகுறித்து ஆஸ்திரேலியா அணியின் லெஜன்ட் ஜெஃப்ரி பாய்காட் கூறும் பொழுது ” விராட் கோலியை இந்தியா மிகவும் தவற விடுகிறது. ஜடேஜா தற்பொழுது தொடையில் ஏற்பட்ட காயத்தால் வெளியேறிவிட்டார்.