எங்கள் கதவை அமலாக்கத்துறை தட்ட வேண்டிய அவசியம் இல்லை : அண்ணாமலைக்கு அமைச்சர் துரைமுருகன் பதில்..!

கே வி குப்பத்தில் நேற்று நடைபெற்ற என் மண், என் மக்கள் நடை பயணத்தின் போது பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை, வேலூர் எம்.பி. கதிர் ஆனந்த் வீட்டின் கதவை அமலாக்கத்துறை விரைவில் தட்டும் எனக் கூறியிருந்தார்.

இந்த நிலையில் காட்பாடி அடுத்த காங்கேயநல்லூர் முதல் பாலாறு இணையும் வரை உள்ள பாண்டியன் மடுவு கால்வாய் புனரமைப்பு பணிகளை அமைச்சர் துரைமுருகன் நேற்று அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். அப்போது அமைச்சர் துரைமுருகனிடம் இது குறித்து நிருபர்கள் கேட்ட போது, அவர்கள் ஒன்றும் எங்கள் கதவை தட்ட வேண்டாம். அந்த கஷ்டம் அவர்களுக்கு எதற்கு நாங்களே திறந்து வைத்திருக்கிறோம் என்று தெரிவித்தார்.

மேலும் பொருளாதாரத்தில் தமிழகம் பின்தங்கி உள்ளதாக அண்ணாமலை கூறியது குறித்து கேட்டதற்கு அவர் என்ன வந்து பார்த்தாரா. பெரிய பெரிய வல்லுனர்களே எங்களுக்கு சான்றிதழ் கொடுத்திருக்கிறார்கள் என்று துரைமுருகன் தெரிவித்தார்.

மேலும் பாராளுமன்றத் தேர்தல் தொடர்பான கூட்டணி குறித்து எழும் வதந்திகளுக்கு எல்லாம் நான் பதில் சொல்ல முடியாது. கூட்டணி குறித்து முறையாக அறிவிப்பு வரும் என்றும் துரைமுருகன் தெரிவித்தார்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *