சத்தமேயில்லையே.. “ஹைவேஸில்” விரைவில் வருது மாற்றம்.. 35 நெடுஞ்சாலைகளில் அதிரடி.. சபாஷ் தமிழக அரசு
சென்னை: நெடுஞ்சாலையில் நீங்கள் பயணம் மேற்கொள்ளும்போது, உங்கள் பயணம் பாதுகாப்பாக அமைய தமிழக அரசு அடுத்தக்கட்ட அதிரடியை கையில் எடுத்துள்ளது.
சாலை விபத்துக்களை தடுக்க மத்திய அரசு எத்தனையோ விழிப்புணர்வுகளை மேற்கொண்டு வருகிறது.. விபத்து நடைபெறும் இடங்களை கண்டறிந்து விபத்தை தடுப்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. ஆனாலும், சாலை விபத்துகளில் அநியாயமாக உயிர்கள் பறிபோய் கொண்டிருக்கின்றன.
புள்ளி விவரங்கள்: தேசிய குற்ற ஆவண ஆணையம் விபத்துகளை பதிவு செய்து, அதற்கான காரணிகள் மற்றும் புள்ளி விவரங்களை ஒவ்வொரு வருடமும் வெளியிட்டு வருகிறது. அந்தவகையில், கடந்த 2021ம் ஆண்டு, இந்தியாவில் எத்தனை சாலை விபத்துக்கள் நடைபெற்றது என்ற விவரத்தை மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் வெளியிட்டிருந்தது.
அதில், பிற்பகல் 3 மணியில் இருந்து மாலை 6 மணி வரையிலான நேரத்தில் அதிக அளவு விபத்துக்கள் நடைபெற்றதாக கூறியிருந்தது.. நம்முடைய தமிழகத்தை பொறுத்தவரை, இந்த குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் 14,416 விபத்துக்கள் நடைபெற்று இருக்கின்றன. அதுமட்டுமல்ல, 2011 ம் ஆண்டுக்கு பிறகு மிக அதிக அளவு உயிரிழப்பு விபத்துக்களால் ஏற்பட்டது 2021ம் ஆண்டில் தானாம்..
சாயங்காலம்: அதாவது ஒருநாளைக்கு மட்டும் 422 உயிரிழப்புகள் சராசரியாக ஏற்பட்டதாகவும், ஒரு மணி நேரத்திற்கு என கணக்கிட்டால் 18 உயிரிழப்புகள் நடப்பதாகவும், அந்த ரிப்போர்ட்டில் அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது.
இந்நிலையில், கடந்தமாதம், மத்திய அரசு மீண்டும் ஒரு ரிப்போர்ட் வெளியிட்டிருந்தது.. அதில், இந்த ஒரு வருடத்தில் மட்டும் சாலை விபத்துகளில் 4ல் 1 பங்கு விபத்துகள், சாயங்காலம் 6 முதல் இரவு 9 மணிக்குள் நடந்திருப்பதாக கூறி, இன்னொரு அதிர்ச்சியை தந்துள்ளது. மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டுமே 90,663 விபத்துக்கள் நடந்துள்ளதாம்.
நிறைய விபத்துகள்: காரணம், வேலை நேரம் முடிந்து வீடுகளுக்கு செல்பவர்களின் வாகனங்களும், மாலையில் வெளியே செல்பவர்களின் வாகனங்களும் ஏற்படுத்தும் நெரிசல் காரணமாக இந்த விபத்துக்கள் ஏற்பட்டதாம். அதனால், இந்த குறிப்பிட்ட நேரத்தில் கவனமாக எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என்று மத்திய அரசு கேட்டுக் கொண்டிருந்தது.
இந்நிலையில், நம்முடைய தமிழகத்தில், சாலை விபத்துகளை குறைக்க பல்வேறு நடவடிக்கைகள், விழிப்புணர்கள் நடத்தப்பட்டு வருகின்றன.. தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்து ஏற்படும் பகுதிகள் கண்டறியப்பட்டு ரூ.900 கோடியில் மேம்படுத்தப்படுகின்றன… அதாவது, விபத்துகளை தடுக்கும் வகையில் வாகனங்களுக்கான சுரங்கப்பாதை, மேம்பாலங்கள் ரூ.900 கோடியில் அமைக்கபட உள்ளது.