யாத்திரையில் ராகுல் காந்தியே இல்லை.. அவரை போன்ற போலி நபரை பயன்படுத்துகின்றனர்: அசாம் முதலமைச்சர்..!
மணிப்பூர் முதல் மும்பை வரை ராகுல் காந்தி பாதயாத்திரை நடத்தி வரும் வழியில் இந்த யாத்திரையில் கலந்து கொண்டிருப்பது ராகுல் காந்தி இல்லை என்றும் அவரைப் போல போலி நபரை பயன்படுத்துகின்றனர் என்றும் அசாம் முதல்வர் கூறியிருப்பது பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ராகுல் காந்தியின் யாத்திரையை அசாம் முதலமைச்சர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா கடுமையாக விமர்சனம் செய்த நிலையில் ராகுல் காந்தி மீது வழக்கு பதிவு செய்ய அவர் உத்தரவிட்டு இருக்கிறார்.
ராகுல் காந்தி போன்ற போலி நபர் தான் யாத்திரையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்று கூறியுள்ள அவர் நான் காரணம் இல்லாமல் எதையும் சொல்ல மாட்டேன் யாத்திரையின் போது ராகுல் காந்தி இல்லை என்று அவர் தெரிவித்தார்.
அந்த போலி நபர் யார்? அந்த நபரின் பெயர் என்ன உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் விரைவில் வெளியிடுவேன் என்று அவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.