மயிலாடுதுறை மாவட்டத்தில் 2 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் இருக்காது – மாவட்ட ஆட்சியர் மாகாபாரதி அறிவிப்பு!
மயிலாடுதுறை மாவட்டத்தில் 2 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் இருக்காது – மாவட்ட ஆட்சியர் மாகாபாரதி அறிவிப்பு!
மயிலாடுதுறை மாவட்டத்தில் 2 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் இருக்காது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் மயிலாடுதுறை மாவட்ட பகுதிகளான சீர்காழி, செம்பனார்கோயில், தரங்கம்பாடி பகுதிகளுக்கு உட்பட்ட 30 ஊராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளுக்கு 27.01.2023 சனிக்கிழமையும் 28.01.2023 ஞாயிற்றுக்கிழமையும் ஆகிய 2 நாட்கள் குடிநீர் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.
எனவே 27.01.2023 சனிக்கிழமையும் 28.01.2023 ஞாயிற்றுக்கிழமையும் ஆகிய 2 நாட்களுக்கு குடிநீர் வினியோகம் இருக்காது. எனவே பொதுமக்கள் தேவையான அளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொண்டு சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்” மாவட்ட ஆட்சியர் மாகாபாரதி தெரிவித்துள்ளார்.