இந்த 7 விஷயம் தான் பெஸ்ட்.. தமிழ்நாட்டை திரும்பி பார்த்த உலக நாடுகள்.. இதெல்லாம் லிஸ்ட்லயே இல்லையே!
சென்னை: தமிழ்நாடு உலகளாவிய முதலீட்டாளர்கள் சந்திப்பு 2024 ல் தமிழ்நாடு தொடர்பான 7 அறிவிப்புகள் பெரிய அளவில் கவனம் பெற்றன.
சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடந்து வருகிறது. இந்த மாநாட்டில் பல்வேறு முதலீடுகள் தொடர்பான அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. 2 நாட்கள் நடக்கும் மாநாடு ஆகும்.
இன்று பல முக்கிய திட்டங்கள் தொடர்பான அறிவிப்புகள் வெளியாகின. அதில், ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் காஞ்சிபுரத்தில் தொழிற்சாலை அமைக்க ₹6,180 கோடிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்
தூத்துக்குடி, திருநெல்வேலியில் JSW நிறுவனம் ₹12,000 கோடிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து செய்யப்ப்பட்டு உள்ளது.
ஓசூரில் உள்ள ஐபோன் உதிரி பாக ஆலையில் விரிவாக்கம் செய்ய டாடா நிறுவனம் ரூ.12,800 கோடி முதலீடு செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. . கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ₹12,082 கோடி மதிப்பில் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் மொபைல் உதிரி பாகங்கள் தயாரிப்பு தொழிற்சாலையை நிறுவ உள்ளது
தூத்துக்குடியில் ₹16,000 கோடி முதலீட்டில் மின்சார வாகனம் மற்றும் பேட்டரி உற்பத்தி ஆலையை அமைக்க, வியட்நாமைச் சேர்ந்த VinFast நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் மூலம் 3,500 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு.