சிவனுக்கு பிடித்தமான ராசியினர் இவர்கள் தானாம்… உங்க ராசியும் இருக்கானு பாருங்க
ஆதியும் அந்தமும் இல்லாத சிவபெருமான் ஜோதி வடிவானவர் இன்று இந்து மதத்தில் குறிப்பிடப்படுகின்றது.
இந்துக்களை பொருத்த வரையில் சிவபெருமான் கடவுள்களின் கடவுள் என கொண்டாடப்படுகின்றார்.
இந்த வவையில் ஒவ்வொரு ஆண்டும் சிவபெருமானுக்காக கொண்டாடப்படும் சிவராத்திரி விழாவானது விமர்சையாக கொண்டாடப்படுகிறது.
2024 ஆம் ஆண்டுக்கான சிவராத்திரி மார்ச் 8 ஆம் திகதி வருகிறது. இந்த தினத்தில் பக்தர்கள் சிவன் கோயிலுக்கு சென்று வழிப்பாட்டில் ஈடுபடுவது வழக்கம்.
சிவன் தன் பக்தர்கள் அனைவரையும் நேசித்தாலும், சில ராசிக்காரர்கள் மீது அவருக்கு தனிப்பட்ட கருணை இருப்பதாக ஜோதிட சாஸ்திரத்தில் குறிப்பிடப்படுகின்றது. இந்த வகையில் சிவபெருமானுக்கு பிடித்தமான ராசியினர் யார் யார் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் உழைப்பாளிகளாக கருதப்படுகிறார்கள். மேஷ ராசியை ஆளும் கிரகம் செவ்வாய்.இவர்கள் வாழ்வில் வரும் அனைத்து பிரச்சனைகளையும் சிவன் தீர்த்து வைக்கிறார்.
மகா சிவராத்திரி அன்று சிவாஷ்டகம் பாராயணம் செய்வது மேஷ ராசியினருக்கு சிறந்த பலன்களை கொடுக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியினர் இயல்பாகவே மிகுந்த புத்திசாலிகளாக இருப்பார்டகள் இவர்களுக்கு சிவபெருமானின் விசேட கருணை எப்போதும் இருக்கும்.
தொழில் ரீதியாக இந்த ராசியினருக்கு ஏற்படும் பிரச்சினைகள் அனைத்தையும் சிவன் உடனடியாக தீர்த்துவைக்கின்றார்.
மகாசிவராத்திரி தினத்தில் சிவபுராணம் படிப்பது விருச்சிக ராசியினருக்கு பல நன்மைகளை கொடுக்கும்.
மகரம்
மகர ராசியின் அதிபதியான சனி பகவான் சிவனின் மிகப்பெரிய பக்தர். எனவே மகர ராசியினருக்கு சனிபகவானின் அருள் இருப்பதுடன் அவர் வணங்கும் சிவபெருமானின் துணையும் எப்போதும் இருக்கும்.
மகா சிவராத்திரி தினத்தில் மகர ராசியினர் லிங்காஷ்டகம் பாராயணம் செய்வது நன்மை பயக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்கும் சனி பகவான்தான் அதிபதி. கும்ப ராசிக்காரர்கள் மீதும் சிவபெருமானுக்கு அதிகப்படியான கருணை இருக்கும்.
எனவே கும்ப ராசியினருக்கு சனி பகவானால் ஏற்படும் அனைத்து பிரச்சினைகளும் சிவனால் தீர்க்கப்படும்.
மகா சிவராத்திரி தினத்தில் கும்ப ராசியினர் ‘ஓம்நமசிவாய’ என்ற பஞ்சாஷர மந்திரத்தை இரவு முழுவதும் பாராயணம் செய்தால் அனைத்து செல்வங்களையும் பெருவார்கள்.