நீங்கள் Mature Relationship-ல் இருக்கிறீர்கள் என்பதை குறிக்கும் அறிகுறிகள் இவை தான்..
வெளிப்படையான நேர்மையான மரியாதைக்குரிய தகவல் தொடர்பு மூலம் முதிர்ந்த உறவுகள் கட்டமைக்கப்படுகின்றன. தம்பதிகள் எந்த தயக்கமும் இல்லாமல், தங்கள் எண்ணங்களையும் உணர்வுகளையும் வெளிப்படுத்த முடிந்தால் அது முதிர்ந்த உறவு என்பதற்கான அறிகுறியாகும்.
ஒரு முதிர்ந்த உறவின் அடிப்படை விஷயங்களில் ஒன்று மரியாதை. முதிர்ந்த உறவுகளில் உள்ளவர்கள் ஒருவரையொருவர் பரஸ்பர மரியாதையுடன் நடத்துகின்றனர். தங்களின் தனித்துவம், கருத்துக்கள் மற்றும் எல்லைகளை பரஸ்பரம் மதிக்கிறார்கள். தம்பதிகள் ஒருவருக்கொருவர் உணர்ச்சிபூர்வமான ஆதரவை வழங்குகிறார்கள். அது மகிழ்ச்சியான நேரமாக இருந்தாலும் சரி, கடினமான சூழலாக இருந்தாலும் சரி ஆதரவை கொடுக்கின்றனர். இந்த ஆதரவும், ஆறுதலும் இவர்களின் உறவுக்கு பக்கபலமாக அமைகிறது.
எந்தவொரு உறவிலும் மோதல்கள் ஒரு பகுதியாகும். இருப்பினும், முதிர்ந்த தம்பதிகள் மோதல்களை ஆக்கபூர்வமான முறையில் கையாளுகின்றனர். இந்த தம்பதிகள் ஆரோக்கியமான விவாதங்களில் ஈடுபடுகிறார்கள், சமரசம் செய்ய முற்படுகிறார்கள், பழி போடுவது அல்லது குற்றம் சாட்டுவது போன்ற அழிவை ஏற்படுத்தும் நடத்தைகளை தவிர்த்துவிடுகின்றனர்.
ஒரு முதிர்ந்த உறவில் தம்பதிகள் தங்கள் சுதந்திரத்தை பராமரிக்கும் அதே வேளையில், ஒருவரையொருவர் சார்ந்திருப்பதையும் ஏற்றுக்கொள்கின்றனர். தங்கள் தனிப்பட்ட வளர்ச்சியை ஆதரிக்கும் அதே நேரத்தில் ஒருவருக்கொருவர் வலுவான பிணைப்பை உருவாக்கி பராமரிக்கிறார்கள்.
எந்தவொரு உறவிலும் நம்பிக்கை முக்கியமானது. ஒரு முதிர்ந்த உறவில், தம்பதிகள் ஒருவருக்கொருவர் வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுகின்றனர். மேலும் தம்பதிகள் பெரும்பாலும் ஒத்த மதிப்புகள் மற்றும் வாழ்க்கை இலக்குகளைப் பகிர்ந்து கொள்கின்றனர். இந்த ஒற்றுமை உறவு நீண்ட காலம் நிலைத்திருக்க உதவுகிறது.
முதிர்ந்த உறவுகளில் உள்ள தம்பதிகள் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களை ஏற்றுக்கொள்கின்றனர்.. சில வெளிப்புற காரணிகள் உறவில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதைப் புரிந்துகொண்டு, அவர்கள் ஒன்றாக இந்த மாற்றங்களை ஏற்றுக்கொள்கின்றனர்.
ஒரு ஆரோக்கியமான முதிர்ந்த உறவில் இருக்கும் தம்பதிகள் தனிப்பட்ட நோக்கங்களுடன் சேர்ந்து தரமான நேரத்தை ஒன்றாக செலவிடுகின்ற்னார். ஒன்றாக நேரம் செலவிடும் தருணங்கள் மற்றும் தனிப்பட்ட இடம் ஆகிய இரண்டின் முக்கியத்துவத்தை இந்த தம்பதிகள் பாராட்டுகிறார்கள்.
ஒரு முதிர்ந்த உறவில் தம்பதிகள் ஒருவருக்கொருவர் நன்றியையும் பாராட்டுதலையும் வெளிப்படுத்துகிறார்கள். அவர்கள் ஒருவருக்கொருவர் பங்களிப்புகளை அங்கீகரித்து கொண்டாடுகிறார்கள், இதனால் நேர்மறையான மற்றும் ஆதரவான சூழ்நிலையை உருவாக்குகிறார்கள்.