கல்லீரல் நோய்க்கான அறிகுறிகள் இவைதான்.. உஷார் மக்களே
அது சேதமடைந்தால் அது பல பிரச்சனைகளுக்கு காரணமாகிவிடும். குறிப்பாக சிலர் கல்லீரல் பிரச்சனைகளை அடிக்கடி புறக்கணித்து விடுகிறார்கள். இதை பற்றிய சரியான புரிதல் இல்லாமல் இருக்கின்றது.
உடலில் உள்ள மிகப்பெரிய திட உறுப்பு கல்லீரல் ஆகும். இது உடலின் இரத்த விநியோகத்திலிருந்து நச்சுகளை நீக்குகிறது, ஆரோக்கியமான இரத்த சர்க்கரை அளவை பராமரிக்கிறது, இரத்த உறைதலை ஒழுங்குபடுத்துகிறது மற்றும் நூற்றுக்கணக்கான பிற முக்கிய செயல்பாடுகளை செய்கிறது. இது வலதுபுற மேல் வயிற்றில் விலா எலும்புக் கூண்டுக்குக் கீழே அமைந்துள்ளது.
கல்லீரல் ஆரோக்கியமாக இருந்தால், நமது உடல் செயல்பாடுகள் நன்றாக நடக்கும். ஆகையால் கல்லீரலில் சிறிய பிரச்சனை இருந்தாலும், அதன் அறிகுறிகளை கவனிக்க வேண்டும். அதற்கு இதற்கான அறிகுறிகள் என்ன என்பதை நாம் அறிந்திருக்க வேண்டும். கண்களில் மஞ்சள் நிறம், பசியின்மை போன்றவை பொதுவான அறிகுறிகளாக உள்ளன. ஆனால் சில அறிகுறிகளை பாதங்களிலும் காணப்படுகின்றன.
கால்களில் காணப்படும் இந்த அறிகுறிகளை புறக்கணிக்கக்கூடாது.
கால்கள் மற்றும் கணுக்கால்களில் வீக்கம் (Swollen Legs)
புரதங்களை உருவாக்குவதில் கல்லீரல் முக்கிய பங்கு வகிக்கிறது. அதில் செயலிழப்பு ஏற்படும் போது, புரதம் குறைந்து, இரத்தத்தில் திரவங்கள் சேர ஆரம்பிக்கும். இவை பாதங்கள் மற்றும் கணுக்கால்களில் குவிந்து வீக்கத்தை ஏற்படுத்தும்.
நரம்பு பிரச்சினைகள் (Nerve Problems)
கால்களில் சிவப்பு அல்லது ஊதா நரம்புகள் ஆபத்தான கல்லீரல் நோயான சிரோசிஸ் நோயை குறிக்கின்றன. இவை ஸ்பைடர் ஆஞ்சியோமாஸ் என்று அழைக்கப்படுகின்றன.
அரிப்பு பாதங்கள் (Itching)
எந்த காரணமும் இல்லாமல் பாதங்களில் தொடர்ந்து அரிப்பு ஏற்படுவதும் கல்லீரல் பாதிப்பின் அறிகுறியாக இருக்கலாம். கல்லீரல் நோய் இருந்தால், அதன் காரணமாக உடலில் பிலிரூபின் அளவு அதிகரிப்பதால் தோலில் அரிப்பு ஏற்படுகிறது.
குளிர்ந்த பாதம் (Cold Feet)
எந்த காரணமும் இல்லாமல் உங்கள் பாதங்கள் தொடர்ந்து குளிர்ச்சியாக இருந்தால், அது கல்லீரல் நோயின் அறிகுறியாகவும் இருக்கலாம். இது இரத்த ஓட்டத்தை பாதிக்கிறது.