எப்பவுமே எதிர்மறையாக சிந்திக்கும் ராசியினர் இவர்கள் தான்: உங்க ராசியும் இருக்கானு பாருங்க

பொதுவாகவே அனைவரும் எந்த காரியத்தையும் செய்வதற்கு முன்னர் சற்று அந்த காரியத்தில் இருக்கும் சாதக பாதக விடயங்கள் குறித்து ஆராய்வதும் சிந்திப்பதும் வழக்கமாக விடயம் தான்.

ஆனால் ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் குறிப்பிட்ட சில ராசியினர் எல்லா விடயங்களிலும் எதிர்மறை நிகழ்வுகளில் மாத்திரமே கவனம் செலுத்துவார்களாம்.

அப்படி எதிர்மறை எண்ணங்களை அதிகம் கொண்டுள்ள ராசியினர் யார் யார் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

கடகம்

கடகம் ராசியினர் இயல்பாகவே அதிகம் உணர்ச்சி வசப்படக் கூடியவர்களாக இருப்பார்கள். இவர்கள் உணர்வுகளை வெளிப்படையாக சொல்வது மிகவும் சவாலாக விடயமாக இருக்கும்.

பல சமயங்களில் இவர்களின் கருத்து உறவுகளில் தவறான புரிதலை உருவாக்குகிறது. அதனால் அவர்கள் பல விடயங்களில் எதிர்மறையான சிந்தனையுடையவர்களாக இருப்பார்கள்.

கன்னி

கன்னி ராசியினர் எப்போதும் எல்லா விடயங்கள் குறித்தும் அதிகமாக ஆராய்பவர்களாகவே இருப்பார்கள்.

எப்போதும் சுய சந்தேகத்துடன் போராடும் இவர்கள் கவனக்குறைவாக தங்கள் பாதுகாப்பின்மையை சுற்றியுள்ளவர்கள் மீது திணிக்க முயற்சிக்கின்றார்கள்.

மேலும் ஒரு விடயத்தில் இருக்கும் நன்மையை பார்க்கும் முன்னர் பாதக விளைவுகள் குறித்து தான் அதிகமாக சிந்திப்பார்கள்.

விருச்சிகம்

விருச்சிக ராசியினர் இயல்பாகவே மர்மமான விடயங்கள் குறித்து அதிக ஆர்வம் காட்டுவார்கள். இந்த இயல்பின் காரணமாக எதிர்மறையான எண்ணங்கள் இவர்களிடம் அதிகமாக காணப்படும்.

எந்த விடயத்தை ஆரம்பிக்கும் முன்னரும் இவர்கள் மனதில் பாதக விளைவுகள் பற்றிய சிந்தனையே அதிகமாக இருக்கும்.

மகரம்

மகர ராசியினர் எப்போதும் லட்சிய வாதிகளாக இருக்கின்றனர். இவர்களின் நடத்தை அவர்களைச் சுற்றியுள்ளவர்களின் வாழ்க்கையிலும் மன அழுத்தத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தும்.

அவர்கள் எதிர்மறை எண்ணங்களில் அதிகமாக மூழ்கி விடுவார்கள்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *