ஸ்மார்ட் ஃபோனுக்கு அதிகமாக அடிமையாகும் ராசியினர் இவர்கள் தானாம்… உங்க ராசியும் இருக்கானு பாருங்க

தற்காலத்தில் ஸ்மார்ட்போன்கள் ஆதிக்கம் உலகளாவிய ரீதியில் அதிகரித்து வருகின்றது. பெரியவரடகள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் ஸ்மார்ட்போன்களுக்கு அடிமையாகி வருகின்றனர் என்பது மறுக்க முடியாத உண்மை.

ஸ்மார்ட்போன் பாவனைக்கும் ஒருவருடைய ராசிக்கும் சம்பந்தம் இருக்கிறதா? ஆம் ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் குறிப்பிட்ட சில ராசியினர் ஸ்மார்ட்போன்களுக்கு விரைவில் அடிமையாகிவிடுகின்றனர்.

அந்த வகையில் போன்க்கு அதிகமாக அடிமையாகும் ராசியினர் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

மேஷம்

போனுக்கு விரைவாக அடிமையாகிவிடும் ராசியினரின் பட்டியலில் மேஷம் முதலிடம் வகிக்கின்றது. இவர்கள் மனிதர்களை விடவும் போனுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றார்கள்.

எல்லா சந்தர்ப்பங்களிலும் போனை அதிகமாக நம்பியிருக்கின்றார்கள். சமூக வளைத்தளங்களின் ஆதிக்கமும் இவர்களிடம் அதிகமாக இருக்கும்.

மிதுனம்

மிதுன ராசியினர் அவர்களின் உள்ளார்ந்த ஆர்வம் மற்றும் தகவல்தொடர்புக்கான அன்புடன், சமூக ஊடகங்களின் மூலமாகவே ஆறுதல் அடைகின்றனர் .இதனால் இவர்கள் போனுக்கு அதிகம் அடிமையாகி வீடுகின்றனர்.

இவர்கள் மனிதர்களுடன் பேசுவதைவிடவும் சமூக வளைத்தளங்களில் நேரத்தை செலவிடும் போதே அதிகம் மகிழ்ச்சியமைகின்றனர்.

சிம்மம்

சிம்ம ராசியினர் இயல்பிலேயே செல்ஃபி ஆர்வலர்களாக இருக்கின்றனர். அதன் காரணமாகவே இவர்களுக்கு போன் இன்றியமையாத விடயமாக இருக்கும்.

தங்களை தாங்களே ரசிப்பதில் அதிகம் ஆர்வம் காட்டும் சிம்ம ராசியினர் ஸ்மார்ட் ஃபோனுக்கு விரைவில் அடிமையாகி விடுகின்றனர்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *