சூரிய பகவான் இடமாற்றத்தால் பிரச்சனைகளை சந்திக்க போகும் ராசியினர் இவர்கள் தான்! உங்கள் ராசி என்ன?
நவக்கிரகங்களாக விளங்கும் சூரிய பகவான் மாதத்திற்கு ஒரு முறை தன்னுடைய இடத்தை மாற்றுவார்.
இவ்வாறு அவர் இடத்தை மாற்றும் போது 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் தற்போது சூரிய பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்குள் இடம் மாறுகிறார்.
இதனால் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகள் மிக கவனமாக இருக்க வேண்டும். அந்த வகையில் அந்த குறிப்பிட்ட வகையான ராசிகள் எந்த எந்த ராசிகள் என்று பார்க்கலாம்.
1.கடகம்
கடகராசியில் சூரிய பகவான் எட்டாவது வீட்டில் நுழைவதால் இந்த ராசியில் உள்ளவர்களுக்கு பல சிக்கல்கள் வரும்.மன அழுத்தம் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் கவனமாக இருக்க வேண்டும். கோபத்தை முடிந்த வரை கட்டுப்படுத்த வேண்டும்.
2.சிம்மம்
சிம்ம ராசியில் சூரிய பகவான் ஏழாவது வீட்டில் பயணம் செய்ய போகிறார். எனவே உங்கள் ராசியின் அதிபதியாக சூரிய பகவான் தான் விளங்குவார்.இவரின் இட மாற்றத்தால் உங்களுக்கு சில பாதிப்புக்கள் வரும்.வியாபாரத்தில் பெரிய அளவில் லாபம் கிடைக்காது. உங்களது திட்டங்களை மாற்றி கொண்டு செயற்பட வேண்டும். தொழிலில் உங்களுக்கு தன் நம்மிக்கை வரும்.
3.விருட்சிகம்
விருட்சிக ராசியில் சூரிய பகவான் நான்காவது இடத்தில் பயணம் செய்ய உள்ளார். எனவே உங்களுக்கு மன அழுத்தம் கூடுதலாக வரும். வேலை செய்யும் இடத்தில் மற்றவர்கள் உங்களுக்கு சதி திட்டம் செய்வார்கள். மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.