வாழ்வில் பலமுறை காதல் தோல்வியை சந்திக்கும் ராசியினர் இவர்கள் தான் … யார் யார்னு தெரியுமா?
பொதுவாகவே அனைவருக்கும் ஒரு உண்மையான உறவு நமக்காக இருக்க வேண்டும் என்ற அடிப்படி ஆசை இருக்கும்.
ஆனால் இது அத்தனை சுலபமாக எல்லோருக்கும் கிடைத்துவிடும் என சொல்ல முடியாது. ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் சிலர் எப்போதுமே உறவைப் பற்றிக் குழப்பத்தில் இருப்பார்கள், யாருடனும் நீண்ட உறவைப் பேண முடியாமல் விரைவில் உறவை முடித்துக் கொள்கிறார்கள்.
இவர்களுக்கு பிரிவை சந்திப்பது வாழ்வில் பல முறை இடம்பெறுகின்றது. இப்படி காதல் தோல்வியை வாழ்வில் பல தடவை சந்திக்கும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்
மேஷ ராசியினர் சிறிய விஷயங்களுக்கு கூட உடனடியாக கோபப்படும் இயல்புடையவர்கள் அவர்கள் கோபத்தின் விளைவுகளைப் பற்றி சிந்திப்பது குறைவாகவே இருக்கும்.
பல நேரங்களில் அவசர முடிவுகளை எடுத்து விடுவார்கள். இது பெரும்பாலும் அவர்களின் துணையிடம் இருந்து பிரிவதற்கு காரணமாக அமைந்து விடுகின்றது.
மிதுனம்
மிதுன ராசியினர் எப்போதும் சுதந்திரமாக இருக்க வேண்டும் என்ற குணமுடையவர்கள். அவர்கள் வண்ணமயமான கனவுகளை காண்கிறார்கள்.
அவர்கள் எப்போதும் மாற்றத்திற்காக வழியை குறித்து அதிகமாக சிந்திக்கின்றார்கள். இது அவர்கள் எளிதில் சலிப்படையச் செய்வதால், நிலையான, நீண்ட கால உறவுகளைப் பேணுவது அவர்களுக்கு மிகவும் கடினமான விடயமாக அமைகின்றது.
சிம்மம்
சிம்ம ராசியினர் இயல்பிலேயே வசீகரமான தோற்றமுடையவர்கள். இவர்கள் சற்று சுயநலமாக சிந்திப்பவர்கள்.
சில நேரங்களில் அவர்கள் தங்கள் ஆசையை நிறைவேற்ற தங்கள் துணையின் தேவைகளை கூட ஒதுக்கி வைக்கிறார்கள் இதுவே இவர்கள் காதல் தோல்வியடைய காரணமாகிவிடுகின்றது.
விருச்சிகம்
விருச்சிக ராசியினர் உணர்ச்சிமிக்க ஆளுமையுடையவர்கள். இதுவே அவர்களின் பலமாக இருக்கும் அதே வேளை சில சமயம் பலவீனமாகவும் அமைந்து விடுகின்றது.
அவர்களின் ஆழ்ந்த உணர்ச்சிகள் சில சமயங்களில் ஒரு உடைமை இயல்புடன் துணையிடம் நடந்துக்கொள்ள வைக்கின்றது.இதுவே அவர்கள் பிரிவுக்கும் காரணமாகின்றது.