இந்த உணவுகளை சமைத்து உண்டால் மட்டும் தான் உடலுக்கு நன்மை தருமாம்
உணவு என்றால் நம் எல்லோருக்கும் மிகவும் பிடிக்கும். பொதுவாக எல்லோரும் உணவை சமைத்து உண்பது தான் அதிகம். ஆனால் சிலர் சில உணவுகளை சமைக்காமல் பச்சையாகவும் உண்பார்கள்.
ஆனால் நிறைய உணவுகள் பச்சையாக உண்பதால் அது நமது உடலுக்கு பயன் தருவதில்லை, இதனால் உடலுக்கு முழுப்பயன் என்பது கிடைக்காது.
சில காய்கறிகள் மற்றும் தானியங்களை வேகவைத்து சாப்பிட்டால் நம் உடலுக்கு அதிக ஊட்டச்சத்தை தரும்.
இந்த பதிவில் சமைத்து உண்பதால் மட்டும் உடலுக்கு பயன் தரக்கூடிய உணவுகளை தான் பார்க்க போகிறோம்.
உணவு வகைகள்
1. புரதத்தில் சிறந்த உணவான முட்டையை வேகவைத்த உண்ண வேண்டும். இப்படி உண்பதால் உடலுக்கு நல்ல பலன் கிடைக்கும். முட்டையில் தசைகளை வலுவாக்க கூடிய ஊட்டச்சத்து நிரம்பி உள்ளது. உடல் பலவீனமாக இருக்கும் போது முட்டை சிந்த உணவாக நாம் எடுத்து கொள்ளலாம்.
2. பட்டாணி மற்றும் கொண்டைக்கடலை பருப்பு வகைகளை வேகவைத்து உண்ண வேண்டும். இதன்போது இதில் இருக்கும் புரதம், நார்ச்சத்து மற்றும் இரும்புச்சத்து ஆகியவை நேரடியாக சென்று பலத்தை தரும்.
3. கீரை வகைகளில் சத்துக்கள் நிரம்பி உள்ளன. அந்த கீரை வகையை வேக வைக்கும் போது அதில் இருக்கும் புரதம், இரும்புச்சத்து, வைட்டமின் கே, கால்சியம் உடலுக்கு அப்படியே கிடைக்கும். இதனால் நமது ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருப்பதுடன் எலும்புகளை சீராக வைத்து கொள்ளும்.
4. உருளைக்கிழங்கை பச்சையாக உண்பது தவறு, அதை வேகவைத்து உண்டால் தான் உடலுக்கு தேவையான பயன் கிடைக்கும். உருளைக்கழங்கில் உள்ள நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் வைட்டமின் சி உடலுக்கு கிடைப்பது மட்டுமல்லாமல் செரிமான பிரச்சனைக்கும் வழி வகுக்கும்.
5. பழுப்பு அரிசி, ஓட்ஸ், குயினோவா போன்ற தானிய வகைகளில் ஊட்டச்சத்து நிறைவாக காணப்படுகிறது. இதை சமைத்து உண்பதால் இதய ஆரோக்கியத்திற்கு நன்மை கிடைக்கும். இது நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும்.