உடல் எடையை உடனே குறைக்க இந்த உணவுகள் உங்கள் டயட்டில் இருப்பது அவசியம்
ஆனால் மருத்துவரின் ஆலோசனையின்றி அவற்றைப் பயன்படுத்துவது ஆபத்தானது. இப்படிப்பட்ட சில பொருட்களால் பக்க விளைவுகளும் ஏற்படக்கூடும். பலர் உடல் எடையை குறைக்க கடுமையான உடற்பயிற்சிகளை செய்கிறார்கள். சிலர் தீவிரமான உணவு கட்டுப்பாடுகளை கடைபிடிக்கிறார்கள். எனினும், பல சமயங்களில் இவற்றாலும் உடல் எடை குறைவதில்லை.
இன்றைய காலகட்டத்தில், உடல் எடையை குறைப்பது மிகவும் கடினமாகிவிட்டது, ஏனெனில் அதற்கு உணவில் அதிக கட்டுப்பாடு தேவைப்படுகிறது. ஆனால், உடல் எடையை குறைக்க வேண்டுமானால், அனைத்தையும் விட்டுவிட்டு பசியுடன் இருக்க வேண்டும் என்று அர்த்தமல்ல. மாறாக, சரியான, சத்தான உணவை , சரியான அளவில், சரியான நேரத்தில் உட்கொள்ள வேண்டும். ஆரோக்கியமாக இருக்க, ஒரு நபர் நார்ச்சத்து மற்றும் புரதம் நிறைந்த உணவை உட்கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வது உடல் எடையை (Weight Loss) குறைக்க உதவும். சில குறிப்பிட்ட உணவுகளை நமது டயட்டில் சேர்த்து வந்தால், நம் உடல் எடையை எந்த வித பக்க விளைவுகளும் இல்லாமல் குறைக்கலாம். தொப்பை கொழுப்பை (Belly Fat) குறைத்து உடல் எடையை குறைக்க உதவும் சில அத்தகைய சில உணவுகள பற்றி இந்த பதிவில் காணலாம்.
எடை இழப்புக்கு சிறந்ததாக கருதப்படும் உணவுகள் (Best Foods For Weight Loss)
அக்ரூட் பருப்புகள்
அக்ரூட் அதாவது வால்நட்களை (Walnut) உட்கொள்வது இதயத்திற்கு நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. இதில் மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு உள்ளது. ஒரு கைப்பிடி அளவு அக்ரூட் பருப்பில் சுமார் 4 கிராம் புரதம் மற்றும் இரண்டு கிராம் நார்ச்சத்து உள்ளது. இது மிகக் குறைந்த கலோரிகளைக் கொண்டுள்ளது.