உங்கள் சருமம் என்றும் 16 ஆக இருக்க இந்த வீட்டு வைத்தியம் போதும்

முகம் பொலிவிழந்து இருக்க ஹோம்மேட் க்ளென்சர் : உலகில் உள்ள அனைவருக்கும் ஒவ்வொரு விதமான சரும அமைப்புகள் உள்ளன. ஒரு சிலருக்கு உலர்ந்து போகும், வறண்ட சருமம் இருக்கும். ஒரு சிலருக்கு தலையில் இருக்கும் எண்ணெயை விட முகத்தில் எண்ணெய் அதிகமாக இருக்கும். சிலருக்கு, எந்த சோப் உபயோகித்தாலும் ஒவ்வாத தன்மை கொண்ட உணர்திறன் கொண்ட சருமம் இருக்கும். ஒரு சிலருக்கு அவரவர் வயதுக்கேற்ப சரும மாறுபாடுகளும் ஏற்படும். இதற்கெல்லாம் தீர்வு தரும் வகையில் சரியான க்ளென்சரை (Home Made Cleanser) நாம் பயன்படுத்த வேண்டும். சருமத்தை சுத்தம் செய்ய பல வகையான ஃபேஸ் வாஷ் மற்றும் க்ளென்சர்கள் சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. இவற்றை மக்கள் பயன்படுத்தினால் தீர்வு பெறுவதற்கு பதிலாக பக்க விளைவுகளை மட்டுமே ஏற்படுத்தும், மேலும் சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும். இந்நிலையில் சந்தையில் கிடைக்கும் கெமிக்கல் நிறைந்த க்ளென்சரை பயன்படுத்துவதற்கு பதிலாக நீங்கள் வீட்டிலேயே இயற்க்கையான க்ளென்சரை தயாரித்து அவற்றை பயன்படுத்தலாம். இதற்கு பாதாம் மற்றும் ஆளி விதை இருந்தால் போதும். எனவே வீட்டிலேயே பாதாம் மற்றும் ஆளி விதை க்ளென்சரை எவ்வாறு தயாரிப்பது என்பதை தெரிந்துக்கொள்வோம்.
பாதாம் மற்றும் ஆளிவிதை க்ளென்சரை தயாரிப்பது எப்படி:
தேவையான பொருட்கள்:
அரைத்த பாதாம் – 2 டீஸ்பூன்
அரைத்த ஆளிவிதை – 1 தேக்கரண்டி
வெதுவெதுப்பான தண்ணீர் – 2-3 டீஸ்பூன்
முதலில், ஒரு சிறிய கிண்ணத்தில் அரைத்த பாதாம் (Almond) மற்றும் ஆளி விதையை (Flaxseed) எடுத்துக்கொள்ளுங்கள்.
* இந்தக் கலவையில் வெதுவெதுப்பான நீரை சேர்த்து கலக்கவும்.
* இப்போது இந்த கலவை பேஸ்ட் வடிவில் உருவானதும் 5 முதல் 7 நிமிடங்கள் அப்படியே ஊற வைக்கவும்.
* இப்போது தயாரானது பாதாம் மற்றும் ஆளிவிதை க்ளென்சர்.
பாதாம் மற்றும் ஆளிவிதை க்ளென்சரை முகத்தில் எவ்வாறு பயன்படுத்துவது – How to Use Almond and Flaxseed Face Cleanser
* சருமத்தை சுத்தம் செய்யுங்கள்: க்ளென்சரை பயன்படுத்துவதற்கு முன்பு, சருமத்தை நன்றாக சுத்தம் செய்துக் கொள்ளவும்.
* க்ளென்சரை அப்ளை செய்யவும்: இதன் பிறகு பாதாம் மற்றும் ஆளிவிதை க்ளென்சரை முகத்தில் தடவவும். 1 நிமிடம் கழித்து முகத்தை நன்றாக மசாஜ் செய்யவும்.
* வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவவும்: மசாஜ் செய்த பிறகு இந்த க்ளென்சரை 10 நிமிடங்களுக்கு பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவி முகத்தை சுத்தம் செய்யவும்.