ஏற்கனவே அவங்க கடுப்புல இருக்காங்க.. இதுல இந்த மனுஷன் வேற.. ஓலா இ-ஸ்கூட்டர வச்சுட்டு இவரு போட்ற ஆட்டம் இருக்கே!

ஹிட் அண்ட் ரன் (விபத்தை ஏற்படுத்தி தப்பி செல்லுதல்) விஷயத்தில் புதிய சட்ட திருத்தத்தை மத்திய அரசுக் கொண்டு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியநிலையில், இந்த சட்டத்திற்கு எதிராக லாரி ஓட்டுநர்கள் நாடு தழுவிய அளவில் வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
விபத்தை ஏற்படுத்தி தப்பி செல்லும் குற்றத்திற்கு எதிராக மிகப் பெரிய நடவடிக்கையை எடுக்கவே அரசு திட்டமிட்டு வருகின்றது. இப்போதைய நிலவரப்படி விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் செல்லும் குற்றத்திற்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படுகின்றது. இதனை புதிய சட்டத்தின் வாயிலாக 10 ஆண்டுகளாக அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டு இருக்கின்றது.
மேலும், இதற்கான அதிகபட்ச அபராதமாக ரூ. 7 லட்சம் விதிக்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகின்றது. இதனை எதிர்த்தே தற்போது நாடு முழுவதும் உள்ள லாரி ஓட்டுநர்கள் போர்க் கொடியை பிடித்திருக்கின்றனர். அதாவது, வேலை நிறுத்த போராட்டத்தை முன்னெடுத்து இருக்கின்றனர். இதனால், சரக்கு போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டு இருக்கின்றது.
மிக முக்கியமாக அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு வருவதில் மிகப் பெரிய சிக்கல் ஏற்பட்டு இருக்கின்றது. இதில், வாகனங்களுக்கான எரிபொருளும் அடங்கும். ஆம், எரிபொருளை ஏற்றி வரும் லாரி ஓட்டுநர்களும் புதிய சட்டத்திற்கு எதிராக தங்களின் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இதன் விளைவாக நாட்டின் குறிப்பிட்ட சில பகுதிகளில் எரிபொருள் தட்டுப்பாடு மிகப் பெரிய அளவில் தலைவிரித்தாட தொடங்கி இருக்கின்றது.