ஏற்கனவே அவங்க கடுப்புல இருக்காங்க.. இதுல இந்த மனுஷன் வேற.. ஓலா இ-ஸ்கூட்டர வச்சுட்டு இவரு போட்ற ஆட்டம் இருக்கே!
ஹிட் அண்ட் ரன் (விபத்தை ஏற்படுத்தி தப்பி செல்லுதல்) விஷயத்தில் புதிய சட்ட திருத்தத்தை மத்திய அரசுக் கொண்டு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியநிலையில், இந்த சட்டத்திற்கு எதிராக லாரி ஓட்டுநர்கள் நாடு தழுவிய அளவில் வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
விபத்தை ஏற்படுத்தி தப்பி செல்லும் குற்றத்திற்கு எதிராக மிகப் பெரிய நடவடிக்கையை எடுக்கவே அரசு திட்டமிட்டு வருகின்றது. இப்போதைய நிலவரப்படி விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் செல்லும் குற்றத்திற்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படுகின்றது. இதனை புதிய சட்டத்தின் வாயிலாக 10 ஆண்டுகளாக அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டு இருக்கின்றது.
மேலும், இதற்கான அதிகபட்ச அபராதமாக ரூ. 7 லட்சம் விதிக்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகின்றது. இதனை எதிர்த்தே தற்போது நாடு முழுவதும் உள்ள லாரி ஓட்டுநர்கள் போர்க் கொடியை பிடித்திருக்கின்றனர். அதாவது, வேலை நிறுத்த போராட்டத்தை முன்னெடுத்து இருக்கின்றனர். இதனால், சரக்கு போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டு இருக்கின்றது.
மிக முக்கியமாக அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு வருவதில் மிகப் பெரிய சிக்கல் ஏற்பட்டு இருக்கின்றது. இதில், வாகனங்களுக்கான எரிபொருளும் அடங்கும். ஆம், எரிபொருளை ஏற்றி வரும் லாரி ஓட்டுநர்களும் புதிய சட்டத்திற்கு எதிராக தங்களின் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இதன் விளைவாக நாட்டின் குறிப்பிட்ட சில பகுதிகளில் எரிபொருள் தட்டுப்பாடு மிகப் பெரிய அளவில் தலைவிரித்தாட தொடங்கி இருக்கின்றது.
When @OlaElectric owner take revenge to ICE vehicle@bhash pic.twitter.com/1TBITSzn6m
— Pradhan Meena (@Pradhanmeena79) January 3, 2024
இந்த சூழலிலேயே எரிபொருளை நிரப்புவதற்காக காத்திருந்த இருசக்கர வாகன ஓட்டிகளை ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பயன்பாட்டாளர் ஒருவர் கிண்டலடிக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது. “என்ன மாதிரி நீங்களும் எலெக்ட்ரிக் டூ-வீலரை வைத்திருந்தால், இப்படி சிக்கலில் சிக்கி இருக்க வேண்டியதில்லை என்பதே அவரின் கருத்தாகும்.
அனைவரும் பெட்ரோல் நிரப்ப வரிசையில் காத்துக் கொண்டிருக்க, ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் வந்த அவர், ஸ்டைலாக அனைவரையும் ஒரு லுக் விட்டுவிட்டு பின்னர் கூலிங் கிளாஸை மாட்டிக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டார். இதை பார்த்து ஒரு சிலர் சிரிப்பதை நம்மால் பார்க்க முடிகின்றது.
உண்மையில் எலெக்ட்ரிக் டூ-வீலரை வைத்திருந்தால் பெட்ரோல் தட்பாட்டில் இருந்து மட்டுமல்ல எரிபொருள் விலை உயர்வில் இருந்தும் நம்மால் தப்பிக்க முடியும். இதுமட்டுமில்லைங்க காற்று மாசுபாட்டில் இருந்தும் இந்த பூமியை நம்மால் பாதுகாக்க முடியும். வீடியோவில் காட்சி தந்திருக்கும் அந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஓலா எஸ்1 ப்ரோ மாடல் ஆகும்.
இந்தியாவில் பெட்ரோல் டூ-வீலரை பயன்பாட்டில் இருந்து ஒழித்துக் கட்டும் நோக்கில் ஓலா எலெக்ட்ரிக்கால் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்ட முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் இதுவாகும். இந்தியாவில் ஓலா எஸ்1 ப்ரோ ரூ. 1.40 லட்சத்திற்கும் அதிகமான விலையில் விற்கப்படுகின்றது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.
இதில் ஓர் முழு சார்ஜில் 200 கிமீ வரை ரேஞ்ஜைப் பெற்றுக் கொள்ள முடியும். இதுபோன்று இன்னும் பல சிறப்புகளைத் தாங்கிய ஓர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டராகவே ஓலா எஸ்1 ப்ரோ சந்தையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. அந்தவகையில், 7 அங்குல தொடுதிரை எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் வழங்கப்பட்டு இருக்கும் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்றாக உள்ளது.