ரூ 145 கோடிக்கு விலை பேசினார்கள்… நிராகரித்துவிட்டு ரூ 8,300 கோடி நிறுவனத்தை உருவாக்கி சாதித்த பெண்

பில்லியன் டொலர் மதிப்பு கொண்ட நிறுவனத்தை உருவாக்கியவர்கள், தங்களின் வெற்றியின் ரகசியத்தை வளரும் தொழில்முனைவோருக்கு பகிர்ந்துகொள்ள முடிவு செய்துள்ளனர்.

சதவீத அடிப்படையிலான பரிவர்த்தனை
பாகிஸ்தானை சேர்ந்த Suneera Madhani என்பவர் தமது சகோதரர் Sal Rehmetullah என்பவருடன் இணைந்து கடந்த 2014ல் உருவாக்கிய நிறுவனம் தான் Stax. பாகிஸ்தானின் கராச்சி பகுதியை சேர்ந்த பெற்றோருக்கு பிறந்த சுனீரா மதானி அமெரிக்காவில் குடியேறிய பின்னர், புளோரிடா பல்கலைக்கழகத்தில் நிதியியல் பட்டம் பெற்றார்.

அதன் பின்னர் First Data என்ற நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். இந்த நிறுவனத்தில் பணியாற்றவே சதவீத அடிப்படையிலான பரிவர்த்தனைகளை அகற்ற வேண்டும் என்ற திட்டத்தை சுனீரா வடிவமைத்துள்ளார்.

தமது சகோதரருடன் சேர்ந்து, மாதாந்திர சந்தா அடிப்படையில் செயல்படும் ஒரு இணைய தளத்தை உருவாக்கும் பணியைத் தொடங்கினார். தங்கள் திட்டத்தை நிறுவனம் ஒன்றில் சமர்ப்பிக்க, அவர்கள் சார்பாக 100 வாடிக்கையாளர்களை முதற்கட்டமாக பெற்றனர்.

தொழில்முனைவோர் எதிர்கொள்ளும் சவால்கள்
ஆனால் இந்த திட்டத்தின் வெற்றிவாய்ப்புகளை உணர்ந்த ஒரு நிறுவனம் ரூ 145 கோடிக்கு விலை பேசியுள்ளனர். ஆனால் தங்களின் திட்டம் தொடர்பில் நன்கு அறிந்து வைத்திருந்த சுனீரா அதை ஏற்க மறுத்துள்ளார்.

தற்போது Stax நிறுவனத்தின் சந்தை மதிப்பு என்பது ரூ 8,300 கோடி. வளரும் பெண் தொழில்முனைவோர் எதிர்கொள்ளும் சவால்களை நன்கு புரிந்து வைத்திருக்கும் சுனீரா, தற்போது அவர்களுக்கு பயிற்சி அளிக்கும் திட்டத்தை வகுத்துள்ளார். பல பெண்கள் ஆர்வமுடன் தங்கள் ஆலோசனைகளை பெறுவதாகவும் சுனீரா குறிப்பிட்டுள்ளார்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *