கொஞ்சம் காட்டினாகூட அப்படி பேசுறாங்க.. பிரியங்கா மோகன் கிளாமர் பற்றி கூறிய பதில்
நடிகை பிரியங்கா மோகன் தமிழில் சிவகார்த்திகேயனின் டான் படம் மூலமாக அறிமுகம் ஆனவர். அதன் பிறகு எதற்கும் துணிந்தவன், டான், டிக் டாக் போன்ற படங்களில் நடித்தார்.
அவர் தனுஷ் உடன் நடித்து இருந்த கேப்டன் மில்லர் படமும் கடந்த பொங்கலுக்கு ரிலீஸ் ஆகி சுமாரான ரெஸ்பான்ஸ் பெற்றது.
கிளாமர் காட்ட தைரியம் இல்லை
பிரியங்கா மோகன் இதுவரை படங்களில் ஹோம்லியாக மட்டுமே நடித்து வருகிறார். கிளாமராக நடிப்பீர்களா என அவரிடம் ஒரு பேட்டியில் கேட்டபோது, “வெறும் உடலை காட்டி நடிப்பதில் எனக்கு விருப்பம் இல்லை. ரொம்ப அதிகமாக skinshow எனக்கே புடிக்காது. நான் அதில் comfortable ஆக இருக்க மாட்டேன். அவ்ளோ தைரியம் எனக்கு இல்லை.
“நான் பலரை பார்த்திருக்கிறேன். கொஞ்சம் skin show இருந்தால் கூட அவர்களை பற்றி எல்லோரும் judge செய்கிறார்கள். மொத்தமாக full glamour காட்ட தொடங்கிவிட்டார்கள் என விமர்சிக்கிறார்கள்” என பிரியங்கா மோகன் தெரிவித்து இருக்கிறார்.