Thiruvathirai Special : திருவாதிரை களி தெரியும்! அன்று செய்யப்படும் நாட்டுக்காய் கூட்டுக்குழம்பு தெரியுமா?

தேவையான பொருட்கள் மற்றும் செய்முறை

மசாலா அரைக்க

எண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன்

அரிசி – 1 ஸ்பூன்

கடலை பருப்பு – 1 ஸ்பூன்

உளுத்தம் பருப்பு – 1 ஸ்பூன்

வெந்தயம் – கால் ஸ்பூன்

வர கொத்தமல்லி – 2 ஸ்பூன்

கறிவேப்பிலை – ஒரு கொத்து

தேங்காய் – 2 டேபிள் ஸ்பூன் (துருவியது)

கடாயில் எண்ணெய் சூடாக்கி, அரிசி, உளுந்து, கடலை பருப்பு, வெந்தயம், வர கொத்தமல்லி என அனைத்தும் சேர்த்து நன்றாக பொரிந்தவுடன் கறிவேப்பிலை, தேங்காய் சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும். பின்னர் ஆறவைத்து அரைத்துக்கொள்ள வேண்டும். அரை மசாலாவை தனியாக வைததுவிடவேண்டும்.

வெங்காயம் – ஒரு கைப்பிடி

பூண்டு – 15 பல்

தக்காளி – 2

ஊறவைத்த மொச்சை பருப்பு – ஒரு கப்

கத்தரிக்காய் – ஒரு கப்

பூசணிக்காய் – ஒரு கப்

பரங்கிக்காய் – ஒரு கப்

பட்டாணி – ஒரு கப்

முருங்கைக்காய் – ஒரு கப்

வாழைக்காய் – ஒரு கப்

வெங்காயம், தக்காளி, காய்கறிகளை நன்றாக வேகவைத்துக்கொள்ள வேண்டும். இதில் நிறைய நாட்டு காய்கறிகள் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

புளிக்கரைசல் – ஒரு கப்

மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்

குழம்பு மிளகாய் தூள் – அரை ஸ்பூன்

மிளகாய் தூள் – அரை ஸ்பூன்

கொத்தமல்லித்தூள் – 2 ஸ்பூன்

காய்கறிகள் அனைத்தையும் வேகவைத்து, அதில் அரைத்துவைத்துள்ள மசாலா, புளிக்கரைசல், மஞ்சள் தூள், மிளகாய் தூள், குழம்பு மிளகாய் தூள், கொத்தமல்லித்தூள் ஆகிய அனைத்தையும் சேர்த்து நன்றாக பச்சை வாசம்போகும் வரை கொதிக்கவைக்க வேண்டும்.

தாளிக்க தேவையான பொருட்கள்

தேங்காய் எண்ணெய் – 2 ஸ்பூன்

கடுகு – கால் ஸ்பூன்

உளுந்து – கால் ஸ்பூன்

சீரகம் – கால் ஸ்பூன்

கறிவேப்பிலை – ஒரு கொத்து

மிளகாய் – 4

குழம்பு கொதித்து வந்தவுடன், கடாயில் எண்ணெய் சூடாக்கி, அதில் கடுகு, உளுந்து, சீரகம், கறிவேப்பிலை, வர மிளகாய் சேர்த்து தாளித்து அந்த குழம்பில் சேர்த்தால் சுவையான நாட்டுக்காய் கூட்டுக்குழம்பு திருவாதிரை ஸ்பெஷல் தயாராகிவிட்டது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *