இந்த பிரபலமான ஃபோக்ஸ்வேகன் காரை வாங்கியது இந்த நடிகரா!! மனைவி உடன் வந்து ஜாலியா டெலிவிரி எடுத்திருக்காரு!
‘ரதினிர்வேடம்’ இப்படியொரு தலைப்பில் ஒரு படம் வெளிவந்து, சர்ச்சைக்குள்ளனது என சொன்னால், நம்மில் பெரும்பாலானோருக்கு தெரியாது. ஏனெனில், இது ஒரு மலையாள படம் ஆகும். ஆனால், இந்த படத்தின் காட்சிகளை நம்மில் நிறைய பேர் பார்த்திருப்போம். 2011இல் திரைக்கு வந்த இந்த மலையாள படத்தில் ‘பப்பு’ என்கிற கதாபாத்திரத்தில் ஹீரோவாக நடித்து பிரபலமாகிய நடிகர் ஸ்ரீஜித் விஜய் புதியதாக ஒரு ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் செடான் காரை வாங்கி உள்ளார்.
கேரளாவின், கொச்சியில் உள்ள இவிஎம் ஃபோக்ஸ்வேகன் டீலர்ஷிப் ஷோரூமில் ஸ்ரீஜித் விஜய் விர்டுஸ் காரை தனது மனைவியுடன் வந்து டெலிவிரி பெற்றுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட படத்தை அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நடிகர் ஸ்ரீஜித் விஜய்யின் இந்த ஃபேஸ்புக் பதிவு பலரது கவனத்தை பெற்றுள்ளது.
தங்களது 6வது திருமண நாளை முன்னிட்டு புதிய காரை வாங்குவதாக ஸ்ரீஜித் விஜய் இந்த ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார். மேலும், “இன்னும் நிறைய பயணங்கள் முடிக்கப்பட வேண்டும்” என இந்த புதிய காரில் தனது அடுத்த திட்டங்களையும் இந்த ஃபேஸ்புக் பதிவின் மூலம் ஸ்ரீஜித் தெரிவித்துள்ளார். சில்வர் நிறத்திலான ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் காரை நடிகர் ஸ்ரீஜித் விஜய் வாங்கியிருப்பதை அவர் வெளியிட்டுள்ள படத்தில் காணலாம்.
இந்தியாவில் தற்சமயம் பிரபலமான ஃபோக்ஸ்வேகன் கார்களுள் ஒன்று விர்டுஸ் ஆகும். முன்பு விற்பனையில் இருந்த ஃபோக்ஸ்வேகன் வெண்டோ செடான் காருக்கு பதிலாக விர்டுஸ் செடான் அறிமுகம் செய்யப்பட்டது. ஸ்கோடா மற்றும் ஃபோஸ்வேகன் நிறுவனங்களின் கூட்டணியில் உருவான கார்களுள் ஒன்று விர்டுஸ் ஆகும்.
அதாவது, இந்த இரு நிறுவனங்கள் இணைந்து உருவாக்கிய எம்.க்யூ.பி-ஏ0 இந்தியா பிளாட்ஃபாரத்தில் விர்டுஸ் உருவாக்கப்படுகிறது. மேலும், இதே பிளாட்ஃபாரத்தில் உருவாக்கப்பட்டதே ஸ்கோடா ஸ்லாவியா செடான் கார் ஆகும். இந்தியாவில் 1 லிட்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் என இரு விதமான என்ஜின் ஆப்ஷன்களில் விர்டுஸ் கார் விற்பனை செய்யப்படுகிறது.
இதில் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன் விர்டுஸின் டாப் வேரியண்ட்களில் மட்டுமே வழங்கப்படுகின்றது. இதில் 1.0 லிட்டர் என்ஜின் உடன் விர்டுஸ் காரை நடிகர் ஸ்ரீஜித் விஜய் வாங்கியுள்ளார். 1 லிட்டர் பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 115 பிஎச்பி மற்றும் 175 என்எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை காருக்கு வழங்கக்கூடியதாக உள்ளது.
இந்த பெட்ரோல் என்ஜினை 6-ஸ்பீடு மேனுவல் அல்லது 6-ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் வாங்கலாம். மேலும், நடிகர் ஸ்ரீஜித் விஜய் வாங்கியிருப்பது விர்டுஸ் காரின் ஹைலைன் ஆட்டோமேட்டிக் வேரியண்ட் ஆகும். கொச்சியில் இந்த காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.16.39 லட்சமாக உள்ளது.
மறுப்பக்கம், விர்டுஸின் டாப் வேரியண்ட்களில் கிடைக்கும் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 150 பிஎச்பி மற்றும் 250 என்எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை காருக்கு வழங்கக்கூடியதாக உள்ளது. இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு மேனுவல் அல்லது 7-ஸ்பீடு டைரக்ட்-ஷிஃப்ட் கியர்பாக்ஸை பெறலாம்.