தங்க முட்டை போடும் வாத்துன்னா அது இந்த பைக் தான்! ஏன் தெரியுமா?
ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் கிளாசிக் 350 பைக் தற்போது அந்நிறுவனத்தின் தங்க முட்டை போடும் வாத்தாக மாறியுள்ளது. மக்கள் பலர் இந்த பைக்கை கண்ணை மூடிக்கொண்டு வாங்கி வருகின்றனர். இந்த பைக்கிற்கு முன்னால் மற்ற அனைத்து பைக்குகளும் தோற்றுப் போய் வருகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
ராயல் என்ஃபீல்டு நிறுவனம் இந்திய மார்க்கெட்டில் நீண்ட நாட்களாக தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. தொடர்ந்து இந்த நிறுவனம் தயாரிக்கும் பைக்குகள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருவதால் இந்நிறுவனத்தின் பைக் சிறப்பான விற்பனையில் இருக்கிறது. இதே போல தான் கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதமும் அமைந்துள்ளது. ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் பைக்குகள் எல்லாம் சிறப்பான விற்பனையில் இருந்துள்ளன.
கடந்த 2023-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 300 டு 500 சிசி செக்மெண்ட் பைக்குகளில் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் ஐந்து பைக்குகள் டாப் 10 பட்டியலில் இருக்கிறது. இதில் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் 350 சிசி பைக்கான கிளாசிக் 350 பைக் தான் முதலிடத்தில் இருக்கிறது. நீண்ட ஆண்டுகளாக இந்த பைக்கின் விற்பனை சிறப்பாக இருக்கிறது. இந்த செக்மெண்டிலேயே அதிக எண்ணிக்கையில் விற்பனையாகும் பைக் இதுதான்.
ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனைக்கு இந்த பைக் மிகப்பெரிய அளவில் உதவி உள்ளது 300 டு 500 சிசி செக்மெண்டில் இந்த பைக் தான் வெற்றி பெற்ற பைக்காக இருக்கிறது. இந்த பைக்கை இளைஞர்கள் பலர் விரும்பி வாங்கி வருகிறார்கள். நீண்ட ஆண்டுகளாக இளைஞர்கள் மத்தியில் பெரும் கனவாக இந்த பைக் இருப்பதால் தொடர்ந்து சிறப்பான விற்பனையில் இருக்கிறது.
ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தில் ஏகப்பட்ட மாடல் பைக்குகள் உள்ளன. அதில் பெரும்பாலானவை 300-500 சிசி செக்மெண்டில் இருக்கிறது. இந்நிலையில் அத்தனை பைக்குகளும் டாப் 10 பட்டியலில் உள்ளன. இதில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 பைக் தான் முதலிடத்தில் இருக்கிறது. இந்த பைக் கடந்த 2023-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 21,234 பைக் விற்பனையாகியுள்ளது. இது கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாத விற்பனையை உடல் 2.67% அதிகமாகும்.
ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் சூப்பர்ஹிட் பைக் என்றால் இந்த பைக்கை சொல்லலாம். இது ஒரு க்ரூஸர் ரக பைக்காகவும் இந்த பைக் மொத்தமா 6 வேரியன்ட்களிலும் 15 விதமான கலர் ஆப்ஷன்களிலும் விற்பனைக்கு வருகிறது. இந்த பைக்கின் விலையை பொருத்தவரை 1.93 லட்சம் முதல் 2.24 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இந்த விலை போட்டி நிறுவன பைக்குகளின் விலையை விட அதிகம் தான்.
ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 பைக் இன்ஜினை பொருத்தவரை 349 சிசி இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 20.2 பிஎச்பிபவரையும் 27 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கின் முன்பக்க வீலிலும் பின்பக்க வீலிலும் டிஸ்க் பிரேக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் இந்த பைக்கில் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் இருக்கிறது.
இந்த பைக்கின் ஒட்டுமொத்த எடையை பொருத்தவரை 195 கிலோ எடை கொண்டதாக இது உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கில் உள்ள பெட்ரோல் டேங்க்கை பொருத்தவரை 13 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்காக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கின் மைலேஜ் பொறுத்தவரை 32 கிலோமீட்டர் மைலேஜ் தரும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் சிறப்பாக விற்பனையாகும் பைக் இந்த கிளாசிக் 350 பைக் என்பதால் இந்த பைக்கின் விற்பனை ராயல் என்ஃபீல்டு நிறுவனத்திற்கு மிகப்பெரிய அளவில் உதவி வருகிறது. ராயல் என்ஃபீல்டு நிறுவனத்திற்கு இந்த கிளாசிக் 350 பைக் ஒரு தங்க முட்டை போடும் வாத்து போல இருக்கிறது. தொடர்ந்து இந்த பைக்கின் விற்பனை மூலம் அந்நிறுவனம் பெரிய அளவில் அறுவடை செய்ய காத்திருக்கிறது.