ஜெமினி கணேசனின் மகள்தான் இந்த பிரபல நடிகை.. இவர் யார்னு தெரியுதா?
தென்னிந்திய சினிமாவில் உச்ச நடிகையாக இருந்தவருக்கு 6க்கும் மேற்பட்ட நபர்களுடன் காதல் விவகாரங்களில் கிசுகிசுக்கப்பட்டார். இந்த விவகாரங்கள் 30 ஆண்டுகளுக்கு முன்பாக தேசிய அளவில் பரபரப்பாக பேசப்பட்டவை.
ஒரு காலத்தில் இவர் வெள்ளித்திரையில் தோன்றிய போது பல இளைஞர்கள் விசில் அடித்து ஆரவாரம் செய்தனர். அவர் பாலிவுட் நடிகை ரேகா. ரேகா எழுபது வயதை நெருங்கினாலும் தனது அழகை தக்க வைத்துக் கொள்கிறார்.
ரேகாவின் வாழ்க்கை செல்வத்திற்கு குறை இல்லை. இருந்தாலும், அவர் பல கஷ்டங்களைச் சந்தித்து இருக்கிறார். இவர் தனது படங்களின் மூலம் பல ரசிகர்களை சம்பாதித்துள்ளார்.
ரேகா முதலில் நடிகர் ஜிதேந்திராவுடன் இணைத்து பேசப்பட்டார். இருவரும் டேட்டிங் செய்து வந்த நிலையில் ஜிதேந்திராவுக்கு ஏற்கனவே திருமணம் நடந்துள்ளது என்பதால் இவர்களது உறவு நீண்ட நாள் நீடிக்கவில்லை.
அடுத்தடுத்து பல காதல் கிசுகிசுக்களில் சிக்கினார் ரேகா.
எந்த சிக்கல் வந்தாலும் நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்து சினிமாவில் தொடர்ந்து முன்னேறினார்
இதற்கிடையே, அமிதாப் பச்சன் மற்றும் ரேகா இடையிலான காதல் விவகாரம்தான் நாடு முழுக்க சினிமா ரசிகர்களால் அதிகம் பேசப்பட்டது.
அமிதாப் மீதான காதலை ரேகா வெளிப்படையாகவே கூறியிருந்தார். ஆனால் அந்த விவகாரமும் காலப்போக்கில் மறைந்தது.
திரைத்துறையினருடன் இணைத்து பேசப்பட்ட பின்னர், ரேகா டெல்லியை சேர்ந்த தொழிலதிபர் முகேஷ் அகர்வால் என்பவரை திருமணம் முடித்தார். இவர்கள் உறவும் நீண்ட நாட்கள் நீடிக்காமல் விவகாரத்தில் முடிந்தது
அதற்கு பின்னர் நடிகர் சஞ்சய் தத் – ரேகா இடையே காதல் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்தன. பின்னாளில் இருவரும் இதனை மறுத்தனர்.
இத்தனை காதலுக்கு பின்னர் தற்போது நடிகை ரேகா தனிமையில்தான் வசித்து வருகிறாராம். இவர் வேறு யாருமல்ல. மறைந்த நடிகர் ஜெமினி கணேசனின் மகள்தான் இந்த ரேகா.