நான் இல்லாமல் இந்த படத்தை எடுக்க முடியாது என சொன்ன வாலி! சிரித்த MGR
வாலியின் கவிதைகளிலும் தனக்காக எழுதப்படும் பாடல்களிலும் மிகவும் வியந்து போன எம்ஜிஆர் இனிமேல் என் படம் எல்லாவற்றிற்கும் வாலி தான் பாடல் எழுதுவார் என்று சொல்லி இருந்தார்.
இப்படி ஒரு சமயம் எம்ஜிஆர், வாலி இதற்கு படல் எழுத வேண்டாம் என்று சொன்னபோது நடந்த சம்பவம் தான் இது.
வாலியின் கவிதைகளில் கண்ணதாசனே மயங்கி நேரடியாக வீட்டில் சென்று பாராட்டினார் என்று கூட நாம் கேள்விப்பட்டிருப்போம். அவ்வளவு மக்களுக்கு எளிமையாக புரியும் வண்ணம், ஒரு ஹீரோக்கு எப்படி பாடல்கள் எழுத வேண்டும் என்பதும் அவருடைய பாணியின் மிகவும் நன்றாக புரியும்படி எழுதுவார்.
அப்படி ஒரு நாள் எம்ஜிஆர் மற்றும் வாலிக்கும் ஏற்பட்ட மன கசப்பால் உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் வாலியை பாடல்கள் எழுத வேண்டாம் என சொல்லி இருக்கிறார் MGR. .
இப்பொழுது இசை எம் எஸ் விஸ்வநாதன் இல்லை. குன்னக்குடி வைத்தியநாதன்.
அதனால் மிகவும் சோகமுற்ற வாலி , தினமும் படபிடிப்பிற்கு சென்று வந்துள்ளார் வாலி, தினமும் எம்ஜிஆரை சந்தித்து பேச வேண்டும் என நினைத்த வாலி படப்பிடிப்பிற்கு போகும் பொழுது, ஒன்று MGR அவர்கள் இருக்க மாட்டார். இல்லை சூட்டிங்கில் மிகவும் பிசியாக இருப்பார்.
தொடர்ந்து 13 நாட்கள் வெளியே நின்றவரே வாலி இருந்த பொழுது, எம்ஜிஆரின் நண்பர்கள் பார்த்து எம்ஜிஆரிடம் சொன்ன பொழுது, அப்பொழுது போய் இரண்டு நிமிடம் பேசிவிட்டு வாருங்கள் என்று வாலியை சொல்லி இருக்கிறார்கள்.
வாலியோ “அண்ணா இந்த படத்தில் நான் இல்லை” என எம்ஜிஆர் இடம் கேட்ட பொழுது, அதுதான் இந்த படத்தில் “நீ இல்லை என்று சொல்லிவிட்டேனே, அதன் பிறகு ஏன் எதற்கு என்று கேட்கிறாய்” என்று சொல்லி இருக்கிறார் MGR,
” இருக்கட்டும் அண்ணா”.” ஆனால் நான் இல்லாமல் இந்த படத்தை நீங்கள் எடுக்க முடியாது” என்று சொன்னவுடன் எம்ஜிஆர் ஏன்? என்று கேட்டாராம்.
“நான் இல்லாமல் இந்த படத்தை நீங்கள் எடுக்க வேண்டும் என்றால்”” உலகம் சுற்றும் பன் “என்றுதான் வைக்க வேண்டும். ” வாலி அங்கு கண்டிப்பாக இருப்பான்” என்று அவர் கூறவும் எம்ஜிஆர் விழுந்து விழுந்து சிரித்திருக்கிறார்