கிரிக்கெட் உலகிலேயே இப்படி நடந்ததே இல்லை.. சிஎஸ்கே வீரர் செய்த மிரள வைக்கும் சாதனை

மும்பை : ரஞ்சி கோப்பை டெஸ்ட் தொடரின் கால் இறுதிப் போட்டியில் மும்பை அணியின் 10வது மற்றும் 11வது வரிசை வீரர்கள் சதம் அடித்து புதிய சாதனை படைத்து இருக்கின்றனர். இதில் 10வது இடத்தில் இறங்கியவர் தனுஷ் கோட்டியான். 11வது இடத்தில் இறங்கியவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மூலம் பிரபலமான துஷார் தேஷ்பாண்டே.

மும்பை – பரோடா அணிகளுக்கு இடையேயான ரஞ்சி கோப்பை காலிறுதிப் போட்டியில் மும்பை அணி முதலில் பேட்டிங் செய்தது. சர்ஃபராஸ் கானின் தம்பி முஷீர் கான் இரட்டை சதம் அடித்து 203 ரன்கள் குவிக்கவே, அந்த அணி முதல் இன்னிங்க்ஸில் 384 ரன்கள் சேர்த்தது.

அடுத்து ஆடிய பரோடா அணி 348 ரன்கள் குவித்து ஈடு கொடுத்தது. இரண்டாவது இன்னிங்ஸில் அதிக ரன் குவிக்க வேண்டும் என்ற நிலையில் இருந்த மும்பை அணி 337 ரன்களுக்கு 9 விக்கெட்களை இழந்தது. இதுவே போதுமான ஸ்கோர் எனும் போதும் பத்து மற்றும் பதினோராம் வரிசை பேட்ஸ்மேன்களான தனுஷ் கோட்டியான் மற்றும் துஷார் தேஷ்பாண்டே அதிரடியாக ரன் குவித்தனர்.

தனுஷ் 129 பந்துகளில் 120 ரன்களும், துஷார் 129 பந்துகளில் 123 ரன்களும் குவித்தனர். கடைசி இரண்டு இடங்களில் களமிறங்கிய பேட்ஸ்மேன்கள் சதம் அடிப்பது முதல் தர கிரிக்கெட் வரலாற்றில் இதுவே முதல் முறை என கூறப்படுகிறது. கிரிக்கெட் உலகிலேயே இதுவரை செய்யாத அதிசய சாதனையை செய்தனர் தனுஷ் – துஷார்.

அவர்கள் சதம் அடித்ததை காட்டிலும் ஒருநாள் போட்டி போல ஒரு பந்துக்கு ஒரு ரன் என்ற விகிதத்தில் ரன் குவித்து இருந்தது பலரையும் வியப்பில் ஆழ்த்தியது. தனுஷ் 10 ஃபோர், 4 சிக்ஸ் அடித்து இருந்தார். துஷார் 10 ஃபோர், 8 சிக்ஸ் அடித்து இருந்தார்.

மும்பை அணி 569 ரன்களுக்கு ஆல் – அவுட் ஆனது. தனுஷ் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அடுத்து கடைசி நாளில் பரோடா அணி 121 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்தது. இதை அடுத்து மும்பை அணி வெற்றி பெற்றது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *