எந்த இந்திய வீரருக்கும் இப்படி நடந்ததே இல்லை.. அசிங்கப்பட்ட ஹர்திக் பாண்டியா.. என்ன நடந்தது?

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா கடைசி ஓவரில் அவுட் ஆகி சென்ற போது மைதானத்தில் இருந்த பெரும்பாலான ரசிகர்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி ஆர்ப்பரித்தனர். மும்பை இந்தியன்ஸ் அணியின் ஒரு பகுதி ரோஹித் சர்மா ஆதரவு ரசிகர்களும் சேர்ந்தே அதை கொண்டாடினர். பலரும் பாண்டியா பெயரைக் கூறி கூச்சலிட்டனர். சிலர் ரோஹித் சர்மாவுக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பினர்.

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் ஒரு நட்சத்திர இந்திய வீரர் ஆட்டமிழந்து செல்லும் போது ஐபிஎல் தொடரில் என்னதான் எதிரணி என்றாலும் கூட ரசிகர்கள் இப்படி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது இல்லை. அகமதாபாத் மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியைக் காண 80,000 ரசிகர்கள் வந்திருந்தனர். அது ஹர்திக் பாண்டியாவின் சொந்த மாநிலமும் கூட. அப்படி இருந்தும் அவரது விக்கெட் பறி போனதால் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி வாய்ப்பை இழந்ததை அனைவரும் கொண்டாடினர்.

இதற்கு காரணம், குஜராத் டைட்டன்ஸ் அணியில் இருந்து ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தாவியதும், ரோஹித் சர்மாவின் கேப்டன் பதவியை பறித்தது மட்டுமின்றி இந்தப் போட்டியின் துவக்கத்தில் தான் பிறந்தது குஜராத் என்றாலும், தனது கிரிக்கெட் பிறப்பு மும்பையில் தான் நடந்தது என குஜராத் மண்ணில் நின்று கொண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கேப்டனாக இருப்பதை அவர் பெருமையாக பேசியது அகமதாபாத் ரசிகர்களை கொந்தளிக்கச் செய்தது.

இந்தப் போட்டியில் குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்து 6 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்தது. அடுத்து சேஸிங் செய்த மும்பை அணியில் ரோஹித் சர்மா 29 பந்துகளில் 43 ரன்களும், டெவால்ட் ப்ரீவிஸ் 38 பந்துகளில் 46 ரன்கள் அடித்ததும் மட்டுமே சிறந்த பேட்டிங் ஆக இருந்தது.

மற்ற பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து சென்றனர். கடைசி 2 ஓவர்களில் 27 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் ஹர்திக் பாண்டியா களத்துக்கு வந்தார். 19

வது ஓவரில் அவர் ஒரு பந்து மட்டுமே சந்தித்தார். அந்த ஓவரில் சிக்ஸ் அடித்த திலக் வர்மா விக்கெட்டை பறிகொடுத்தார். கடைசி ஓவரில் 19 ரன்கள் தேவை என்ற நிலையில் ஹர்திக் பாண்டியா களத்தில் இருந்தார்.

முதல் இரண்டு பந்துகளில் ஒரு ஃபோர், ஒரு சிக்ஸ் அடித்தார். ஆனால், மூன்றாவது பந்தில் ஆட்டமிழந்தார். அப்போது அவர் வெளியேறிய போது ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர். இந்திய மண்ணில் எந்த ஒரு கிரிக்கெட் வீரருக்கும் ஐபிஎல் தொடரில் கூட இப்படி ஒரு சம்பவம் நடந்ததில்லை. உதாரணத்துக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதிய போட்டியில் கோலி ஆட்டமிழந்து சென்ற போது, சிஎஸ்கே ரசிகர்கள் தங்கள் அணியின் பந்துவீச்சை கொண்டாடினார்கள். யாரும் கோலி செல்லும் போது அவரைப் பார்த்து கோஷம் எழுப்பவில்லை. இந்திய ரசிகர்களால் வெறுக்கப்படும் முதல் இந்திய வீரராக மாறி இருக்கிறார் ஹர்திக் பாண்டியா.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *